-2.4 C
New York
Friday, December 13, 2024

Buy now

spot_img

Kabali fame Villain Lingesh Turns Handsome Hero Now

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்

மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த கதாபாத்திரத்திற்காக ஈடுபாட்டுடன் நடித்திருப்பார்.

அறிமுக இயக்குனர் ஜெய்அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதா நாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ்.

கதா நாயகனாக நடிக்கும்
இந்தப்படத்தில் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர்போல இருக்கவேண்டுமென்று இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையை குறைத்திருக்கிறார்.

கலர்புல்லான அதே சமயம் சமூககருத்தையும் பேசுகிற
கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும்
சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும் , மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இருக்கும்.

சமீபத்தில் இந்தபடத்திற்கான போட்டோசூட் நடைபெற்றிருக்கிறது.

இந்தப்படத்திற்குப்பிறகு லிங்கேஷ், இயக்குனர் ப்ராங்ளின் இயக்கும் படத்திலும்,
இதே நிறுவனத்தின் அடுத்தபடத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

தனி இசைக்கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார்.

இந்தியில் டோட்டல் தமால் படத்தின் ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

படத்தொகுப்பு அஷோக் .

கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய்அமர்சிங்
இவர் லண்டன் திரைப்படக்கல்லூரியில் பயின்றவர் என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குனர் அஹ்மத்தின் துணை இயக்குனராக இருந்தவர்

தீபாவளிக்குப்பிறகு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

பிரவீன் மற்றும் சரத் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE