விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் இணைந்துள்ளார் இதனால் வேறு இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு என்று தான் சொல்லணும் வணக்கம் சென்னை ஒரு முழு நீள நகைசுவை படம் இந்த இயக்குனரை நம்பி எப்படி விஜய் ஆண்டனி படம் கொடுத்தார் என்ற ஒரு கேள்வி அனைவரிடமும் இருந்தது ஆனால் இந்த படத்தின் கதை மிகவும் ஆழமான அம்மா செண்டிமெண்ட் நிரந்த ஒரு படம் விஜய் ஆண்டனி திரை வாழ்கையில் இந்த படம் நிச்சயம் மிக பெரிய ஒரு மைல் கல்லாக அமையும்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி,அஞ்சலி,சுனைனா,அம்ருதா சில்பா மஞ்சுநாத், யோகிபாபு,ஆர்.கே.சுரேஷ்,வேலா ராமமூர்த்தி,நாசர்,ஜெயப்ரகாஷ்,மதுசூதன ராவ் மற்றும் பலர் நடிப்பில் ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில்,விஜய் ஆண்டனி இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காளி
இந்த படத்தின் முதல் ஏழு நிமிட காட்சியை படம் வெளியாகும் முன்னே சமுக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் ஒரும பெறும் எதிர்பார்ப்பை உண்டுபன்னியவர்கள் இந்த படக்குழு முதல் ஏழு நிமிடம் அருமை என்று திரை அரங்குக்கு சென்றவர்களுக்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் இல்லாமல் மிக சிறந்த விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி
அமெரிக்காவில் மிக பெரிய இருதய அருவைசிகுச்சை மருத்துவர் தான் விஜய் ஆண்டனி இவருக்கு கனவில் அடிக்கடி இந்தியாவில் இருக்கும் ஒரு குழந்தை கனவில் வரும் அந்த குழந்தையை பாம்பு கடிப்பது போல அவருக்கு கனவும் வரும் இதை தன் அப்பா அப்பாவிடம் சொல்லும் விஜய் ஆண்டனி அந்த நேரம் விஜய் ஆண்டனி அம்மா உடம்பு சரியில்லாமல் போக அவருக்கு இரண்டு கிட்னியும் பாதித்துள்ளது என்று சொல்ல விஜய ஆண்டனி என் அம்மாவுக்கு என் கிட்னியை கொடுக்கிறேன் என்று முன்வருகிறார் ஆனால் அவரின் அப்பா அதை தடுக்கிறார். ஏன் என்று விஜய் ஆண்டனி கேட்க நீ எங்கள் பிள்ளை இல்லை உன் கிட்னி அம்மாவுக்கு பொருந்தாது என்று சொல்ல விஜய் ஆண்டனி அப்படியே உறைந்து போகிறார்.இவரை சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து தான் தத்து எடுத்தோம் என்று சொல்ல்கிறார் அவரின் வளர்ப்பு அப்பா
உடனே இந்தியா கிளம்பி வரும் விஜய் ஆண்டனி தன் கனவில் வரும் காட்சிக்கும் தன் பிறப்புக்கும் சமந்தம் உள்ளதை கண்டு பிடித்து அந்த கிராமம் போகிறார் அப்போது தான் அவர் பெயர் காளி என்பதும் தெரியவருகிறது அம்மா இறந்துவிட்டார் என்றும் தெரிய வருகிறது. தன் அம்மா உருக்கு கிளம்பி தன் தந்தை யார் தன் பூர்விகம் என்ன என்று தெரிந்து கொள்ள கிளம்புகிறார்.அங்கு சென்ற பின் தான் பல உண்மைகள் வெளியாகிறது அம்மா அப்பா எப்படி கொளையபட்டர்கள் யார் செய்தார்கள் என்று தெரிந்து பழிவாங்கும் கதை தான் இந்த படத்தின் மீதி கதை
படம் முழுக்கமுழுக்க ஒரு ஆக்சன் அம்மா செண்டிமென்ட்படம் அதே போல யோகிபாபு காமெடி படத்துக்கு மேலும் பலம் என்று தான் சொல்லணும் படத்தின் இயக்குனர் கிருத்திகா மிக வித்தியாசமான ஒரு திரைகதை மூலம் ரசிகர்களை மிகவும் கவர்கிறார் படத்தின் திரை கதையில் மிகுந்த ட்விஸ்ட் வைத்துள்ளார். இயக்குனர் கிருத்திகா படம் மிகவும் விருவிருப்பாக அமைத்துள்ளார் .
விஜய் ஆன்டணி நாளுக்கு நாள் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் என்று தான் சொல்லணும் அஞ்சலி யோகிபாபு காமெடி கதைக்கு மேலும் பலம் அதோடு புதுமுகங்களாக அறிமுகம் ஆகும் அம்ருதா மற்றும் சில்பா மஞ்சுநாத் இருவரும் தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் காதல் காட்சிகளில் விஜய் ஆண்டனி சொன்னது போல கொஞ்சம் நெருக்கமாக நடித்துள்ளார் .
எப்பவும் போல நாசர்,வேலாராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தன் பங்குக்கு முத்திரை பதித்துள்ளார்கள் படத்துக்கு இசை பாடல்கள் மிகுந்த பலம் என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்த படத்திலும் முத்திரை பாதிக்கும் அம்மா பாடல் அதே போல ரிச்சர்ட். எம்.நாதன் ஒளிப்பதிவு படத்துக்கும் சரி இயக்குனருக்கும் மிக பெரிய பலம் படத்தின் இயக்குனர் தான் ஒரு சிறந்த இயக்குனரென்று இந்த படம் மூலம் நிருபித்துள்ளார் .
காளி ரஜினியின் படத்தின் பெயரை வைத்து அந்த டைட்டில்க்கு எந்த வித பங்கம் இல்லாமல் பெருமை சேர்த்துள்ளனர் இயக்குனரும் விஜய் ஆண்டனியும்