6.1 C
New York
Friday, March 29, 2024

Buy now

Jiivi 2

முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘ஜீவி 2’ கதையும் அதே தொடர்பியல் விதி மூலம் பயணிக்கிறது. இந்த கதையில் நடக்கும் சம்பவங்கள் எப்படி முதல் பாகத்தின் சம்பவங்களுடன் ஒத்துப்போகிறது, என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதோடு, தொடர்பியல் விதியை ஹீரோ தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு காரணமான அல்லது அதனால் பலன் பெறும் நபருக்கு அந்த செயலின் தொடர்ச்சி நல்ல விதமாகவோ அல்லது தவறான விதமாகவோ ஏதேனும் ஒரு வகையில் தொடரும் என்ற நம்பிக்கையால் ஏற்படும் சுவாரஸ்யமே இந்தப் படங்களின் அடிப்படை. இரண்டாம் பாகத்தில் நாயகன் வெற்றி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புமிக்க கணவராக வருகிறார். மனைவி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட…அதற்காக கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கும் வெற்றிக்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாக, அஸ்வினியின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப் போவதாக அவரது தாய் மாமன் மைம் கோபி கூறுகிறார். மனைவியின் மருத்துவ செலவுக்கு அந்த வீட்டை வங்கியில் அடகு வைக்கலாம் என்றிருந்தார் வெற்றி. ஆனால் அதற்குள் இப்படி ஒரு சூழல்.அவர் வாங்கிய கார் பழுதாகி விடுகிறது அதனை சரி செய்ய 30 ஆயிரம் தேவை. இது ஒருபக்கம் இருக்க அக்கா மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போககுழப்பத்தில் இருக்கும் நாயகனுடன் கூட்டணி சேர்கிறார் பணக்கார வீட்டுப் பையனாக வரும் முபாஷிர்.மாமியார் வழியே அந்த  வீடு  தனக்கு வரும் என்று எண்ணிய நிலையில் , மாமியார் தன் தம்பிக்கு அந்த வீட்டைக் கொடுக்க முடிவு எடுக்கிறாள் .   கணவனைப் பிரிந்த அக்கா அவளது பிள்ளை, அம்மா,  அப்பா, மாமியார்,   மாமனார், மனைவி ஆகியோரின் மளிகைச் செலவு,  குடும்பச் செலவு,  மருத்துவ செலவு யாவும் தன் தலையில் விடிய,மனைவியின் கண் ஆபரேஷனுக்கு புதிதாக அறிமுகமான பணக்காரர் முபாஷிர் வீட்டில் திருட நினைக்கிறார், வெற்றி. நண்பர் கருணாகரனும் இந்த திருட்டில் வெற்றிக்கு உதவ, திருடும் முயற்சி தடையின்றி நடந்தேற, அதேநேரத்தில் அந்த நண்பன் முபாஷீர் கொலையாக…கொலைப்பழி இவர்கள் மேல் விழுந்ததா? வெற்றி தன் மனைவியை காப்பாற்றினாரா? என்பது திகுதிகு கிளைமாக்ஸ்.இயல்பாக நடிப்பதை தன் பாணியாக வைத்துக்கொண்டு தனி பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். இதை வெற்றியின் அடையாளம் என்றும் அவரது வெற்றியின் அடையாளம் என்றும் கொள்ளலாம்.நாம் யாருக்கு நல்லது செய்கிறோமோ அவர்கள் நமக்கு கெடுதல் செய்வது போலவே நாம் யாருக்கு கெடுதல் செய்கிறோமோ அவர்கள் நமக்கு நல்லது செய்திருக்கவும் கூட வாய்ப்பு உண்டு என்ற வாய்ப்பினைச் சொல்லும் திரைக்கதைப் பகுதி அபாரம்.வழக்கமான அடிதடி மசாலாக்களைக் கொட்ட நினைக்காமல் மத்திய வர்க்க மக்களின் வாழ்வியல் சுவார்சியங்களை, அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த வகையில்,இந்த பார்ட் 2’ ஈர்க்கிறது இந்த ‘ஜீவி 2’.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE