தாயை இழந்து சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் கஷ்டப்படும் சிறுவனின் வாழ்க்கை தொடங்கி, சினிமா திரைப்படங்களுக்கு Finance செய்யும் அளவுக்கு உயரும் பார்த்திபனின் பயணம் எப்படி இருந்தது? அவன் மனநிலை என்ன? ஏன் அந்த முடிவை எடுக்கிறான்? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...: கள்ளத்தனமான உறவில் பிறந்த குழந்தை நந்து வின்(ராதாகிருஷ்ணன் பார்த்திபன்) தாய் கணவனால் கொலை செய்யப்பட குழந்தை அனாதை ஆகிறது. அதை எடுத்து வளர்ப்போர் சில நாளில் கைவிடுகின்றனர். பின்னர் காக்கிசட்டை நபரால் நந்து தவறாக பயன்படுத்தப்பட பல இன்னல்களுக்கு ஆளாகி கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பெரிய ஆள் ஆகிறான். முதல் காதலி ஏமாற்ற இரண்டாம் காதலி சிலக்கம்மா (பிரகிடா சகா) நந்துவின் உயிராகிறாள். ஒருகட்டத்தில் அவளையும் இழக்கும் நந்து தன் வாழ்வை சீரழித்தவர்களை சுட்டு வீழ்த்த துபபாக்கியுடன் புறப்படுகிறான். பாவம் செய்த மனத்துடன் நிம்மதி தேடும் நந்து யாரை யெல்லாம் பழிவாங்கினான் என்பதே கிளைமாக்ஸ்.அப்படியே பட ஆக்கம் எனப்படும் மேக்கிங்கிற்கு வருவோம். 94 நிமிஷம் 36 செகண்டுல ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம், அதுவும் நான் லீனியர் என்று சொல்லப்படும் சம்பவங்களை கோர்வையாக வரிசையாக சொல்லாமல் மாற்றிமாற்றி சொல்லும் முறையில். ஆனாலும், 93 வது நிமிஷம் அதுவும் கடைசி அந்த கிரேன் ஷாட் எடுக்கும் போது கிரேன் ஸ்ட்ரக் ஆக, மறுபடியும் மொதல்ல இருந்து ஷாட் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவன் பின்பு என்ன ஆவான் என்பதை பல படங்களில் பார்த்திபன் காட்டி வருகிறார்.
இந்தப் படத்தின் கதைக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை. அதுபோல பாடல்களும் அதன் வரிகளும் நம்மை கவர்கின்றன.
பின்னணியில் இசையில் கதைக்குத் தேவையானதை உணர்ந்து கொடுத்திருக்கிறார்.முக்கியமாக கலை இயக்குனர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்துள்ளார்.இத்தனை சிறப்புகளை ஒன்றிணைத்து படத்தை கருவில் சுமந்துபெற்றெடுத்த தாயாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எத்தனை இரவுகள் தூக்கத்தை இழந்தாரோ என்பது அந்த இரவின் நிழலுக்குத்தான் தெரியும்.
