27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

I am Scared to touch my Mobile phone- Samantha

“Many of my friends have been victims to cybercrime” –  “irumbuthirai” Samantha Akkineni

She has been someone, who has been always ennobled with the adjectives like ‘Cute and Bubby missy’. Naturally, this is something that every missy in Tinsel Town would love to acknowledged with. But then, what Samantha feels is extremely exceptional. Well, she feels and assures that her role ‘Rathi Devi’ in the film ‘Irumbu Thirai’ is so much mature and she feels more refreshing about it. “ Yes, no woman in real life is extra bubbly or cute. It’s not a true portrayal of women. But I am happy that Rathi Devi is a true portrayal of a women.” 

At this current situation, where information theft has been prevailing as a speculative issue, Irumbu Thirai script was penned even prior to its domain extending into larger extent. So how did Samantha feel while the script was narrated to her? 

“When hearing the script, I was literally shocked while listening the script and even feared to touch my phone. The way Mithran has shown the situation is truly inspiring and it will be enlightening more people. They will definitely understand how bad the situation is over the leakage of privacy.”

While Samantha’s career graph has been loaded with movies directed by top league directors, but how about working with a newcomer like PS Mithran?  Samantha instantly replies saying, “Well, Mithran was never seemed or behaved like a newcomer. He was so much intelligent and was absolutely brilliant while narrating the script or while making them as a movie.” 

Has there been any real life instances relating to cybercrimes that happened in the real life of Samantha? “Thank God! I have never been a victim to such instances, but many in my close circle have experienced it. It happens that we would be planning up for a trip and the very next minute would get personal SMS claiming that cheap hotels and tickets are available. 

So how about a life without FB, Twitter, Instagram and social media? 

“Maybe, it would be quite good, but that’s not possible for the current scenario as we have become addicted. But I am sure that Irumbu Thirai would be enlightening for the audiences that will educate them on how to handle the social media without being succumbed to the web of issues.” 

Finally, to wind up with the chat, who’s the hottest between Action King Arjun and Vishal? 

“Both are hot in their own ways and they are unbeatably unique.”

 

கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது  – இரும்புத்திரை  சமந்தா அக்கினேனி

இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு  இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும்   என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து  பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து  உள்ளார்கள்.

இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.

இரும்புத்திரை வருகிற மே மாதம்  11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE