10.8 C
New York
Sunday, April 27, 2025

Buy now

spot_img

“Hitler” Trailer launch

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

“ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது !!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில் கலந்துகொண்ட

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…,
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. சென்னை வந்து 13 வருடம் ஆகிவிட்டது, நல்ல படம் பண்ணனும், நல்ல இயக்குநரோடு, நடிகரோடு நடிக்க ஆசைப்பட்டேன். அந்த வகையில் இந்தப்படம் கிடைத்தது மகிழ்ச்சி. தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. நான் பார்டி போனால் விஜய் ஆண்டனியின் மஸ்காரா பாட்டுக்குத் தான் ஆடுவேன், இப்போது அவர் படத்தில் நடனமாடியிருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். தனா சார் படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
ஒரு நல்ல எண்டர்டெயினர் திரைப்படம் 27 ஆம் தேதி வருகிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். விஜய் ஆண்டனி, ஆக்சன், மாஸ், சொசைட்டிக்கு தேவைப்படுற மெசேஜ் எல்லாம் சேர்த்து, இந்தப்படத்தை நம்மிடம் கொண்டு வந்துள்ளார். சஞ்சய்க்கும் அவர் தந்தை ராஜாவுக்கும் இந்தப்படம் நல்ல லாபம் தரட்டும், நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது…
என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை, அந்த வகையில் தான் இந்த ஆக்சன் படம் செய்துள்ளேன், விஜய் ஆண்டனி சாரை இதில் வித்தியாசமாகப் பார்க்கலாம். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
"இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான மெசேஜ் வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும்" என்றார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE