ஹர ஹர மஹாதேவகி படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நகைசுவை படம் லாஜிக் எல்லாம் கிடையாது ஒன்லிகாமெடி மேஜிக் தான் இந்த படம் வயிறு குலுங்க சிரிக்கும் ஒரு முழு நீல காமெடி சித்திரம்
இன்றைய சினிமா ரசிகர்கள் என்றால் அது இளைஞர்கள் தான் அவர்கள் தான் அதிகம் திரையரங்கம் வந்து படம் பார்ப்பவர்கள் அந்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் இளைஞர்களை கவரும் வகையில் மிக நகைசுவையாக எடுத்துள்ளார் இயக்குனர் சன்தோஷ் P ஜெயக்குமார் தயாரிப்பாளர் நலன் கருதி வியாபார யுக்க்தியுடன் படம் எடுத்து இருக்கும் இந்த இயக்குனரை பாராட்டவேண்டும்.
இந்த படம் இளைஞர்களுக்கு மட்டும் என்று சொல்லும் அளவவுக்கு கவர்ச்சியாகவோ இல்லை படு ஆபாசமான வசனங்கள் வைத்து படம் எடுக்கவில்லை நகைசுவை கலந்த ஒரு சில வசனங்கள் அதும் நாம் அன்றாட பேசும் வசனங்கள் தான் அதை இரட்டை அர்த்தத்தில் எடுத்தால் இரட்டை அர்த்தம் இல்லை சாதரணமாக எடுத்தால் வெறும் நகைசுவை தான் அவர் எடுக்கும் விதம்.
சரி இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நகைசுவை பட்டாளங்கள் தான் என்றும் சொல்லணும் முதல் முறையாக நகைசுவையில் களம் இறங்கி உள்ளார் கௌதம் கார்த்திக் அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் என்றும் சொல்லணும் அதேபோல நாயகி நிக்கிகல்ராணி அவருக்கு நகைசுவை கைவந்த கை அதுனால பின்னி எடுத்துள்ளார். இவர்களுடன் மொட்டைராஜேந்திரன்.கருணாகரன்,ரவி மரியா,ஆர்.கே.சுரேஷ், சதீஷ், பாலசரவணன், நமோநாராயணனன், மனோபாலா, மயில்சாமி மற்றும் பலர் நடிப்பில் பால முரளி பாலா இசையில் செல்வகுமார் SK ஒளிப்பதிவில் தங்கம் சினிமாஸ் S.தங்கராஜ் தயாரிப்பில் தமிழக உரிமை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டில் வந்து இருக்கும் படம் ஹர ஹர மஹாதேவகி
படத்தின் கதை என்றால் இன்றய காலத்து காதலர்கள் போல கௌதம் கார்த்திக் நிக்கிகல்ராணி பிடிக்கவில்லை இருவரும் பிரிந்துவிடுவோம் என்று முடிவெடுகிரார்கள் இதனால் நீ வாங்கி கொடுத்த பொருள்கள் நான் திருப்பி கொடுக்கிறேன் நான் வாங்கி கொடுத்த பொருள்கள் நீ கொடுத்து விடு என்று இருவரும் ஜென்டில் ஒபந்தம் போடுகிறார்கள் அப்போது ஆளும் கட்சி தேர்தலுக்கு கொடுத்த பையில் கௌதம் கார்த்திக் நிக்கிகல்ராணி வாங்கி கொடுத்த பொருள்களை போட்டு கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ரவிமரியா ஆளும் கட்சி கொடுக்கும் பையில் ஒரு பாம் வைக்கிறார் அதை வெடிக்க வைக்க மொட்டை ராஜேந்திரன் கருணாகரன் இருவரையும் செட் செய்து பிரச்சரா மேடையில் வைக்க சொல்லி வைக்கிறார்.அதே போல பால சரவணன் கள்ளநோட்டு வைத்து இருக்கும் பையும் அதே போல ஒரு பை தான் இந்த மூன்று பையும் கலந்து விடுகிறது
நிக்கிகல்ராணி மற்றும் கௌதம் கார்த்திக் சந்திக்க ஹர ஹர மஹாதேவகி ரெசொர்ட்க்கு வர சொல்ல அந்த நேரம்
அந்த ரெசொர்ட்யில் தங்கி இருக்கும் ஒரு குழந்தை கடத்த படுகிறது கடத்தல் காரன் ஒரு கோடி பணம் கொடுத்தல் குழந்தையை விட்டு விடுவேன் என்று மிரட்ட குழந்தையின் பெற்றோர்கள் சரி பணம் தருகிறோம் என்று சொல்ல கடத்தல் காரன் பணத்தை வைக்க கொடுக்கும் பையும் அதே பை இதனால் ஏற்படும் குழப்பத்தை மிக அழகாக நகைசுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் P ஜெயக்குமார்
படத்தில் நடித்த அனைவரும் மிக அழகாக நடித்துள்ளனர். குறிப்பாக ரவிமரியா மற்றும் நமோ நாராயணன் மொட்டை ராஜேந்திரன் கருணாகரன் காமெடி நம்மை மிகவும் கவருகிறது செமையாக சிரிக்கவும் வைக்கிறது அதேபோல ஆர்.கே.சுரேஷ் குழந்தையை கண்டு பிடிக்கும் இன்ஸ்பெக்டராக வருகிறார் அவரும் முதல் முறையாக நகைசுவையில் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்லணும்
இயக்குனர் நட்சத்திர தேர்விலே வெற்றியைகண்டுள்ளார் என்று தான் சொல்லணும் காமெடிக்கு தேவையான அதும் தன் கதைக்கும் கதாபாத்திரதுக்கும் மிக பொருத்தமான நட்சத்திரங்கள் தேர்வு செய்துள்ளார் இயக்குனர் அதே போல படத்துக்கு இசை கதைக்கு தேவைக்கு ஏற்ப இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு ஒரு குத்து பாடல் ஒரு காதல் மெலடி இப்படி பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அதே போல ஒளிப்பதிவாளர் தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்