5.3 C
New York
Monday, March 24, 2025

Buy now

spot_img

Gulaebaghavali Movie will be a pongal Treat for fans

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் "குலேபகாவலி "
KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி ". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், "நான் கடவுள்"ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது.
இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசன காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது.
இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதிலும் இதில் வரும் " குலேபா" பாடல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை அறிமுக ஒளிப்பதிவாளர் R. S. ஆனந்தகுமார் நேர்த்தியாக செய்துள்ளார். படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி. தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை மிக பிரம்மாண்டமாக அமைத்துள்ளார். பாடல்கள் பா. விஜய், கு. கார்த்திக், கோ சேஷா. தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். கலை இயக்குனர் K.கதிரின் கலை வண்ணத்தில் படத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார். நிர்வாக தயாரிப்பு சௌந்தர் பைரவி. தயாரிப்பு மேற்பார்வை P.சந்துரு.
"குலேபகாவலி" திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE