14.7 C
New York
Friday, May 9, 2025

Buy now

spot_img

From January 15, the romantic entertainer ‘Joe’ will be streaming on Disney+ Hotstar !!

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ரொமாண்டிக் பொழுதுபோக்கு படமான 'ஜோ' படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பொங்கல் பண்டிகையை, பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில், இயக்குனர் S ஹரிஹரன் ராமன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜோ' படத்தை, ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள, இந்த அழகான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படம், சித்து குமாரின் அழகான இசை மற்றும் ராகுல் K G விக்னேஷின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஒரு யதார்த்தமான காதல் கதையுடன் பார்வையாளர்களை நிச்சயமாக நெகிழ வைக்கும் படைப்பாக இருக்கும்.

முன்னணி நட்சத்திர நடிகர்களுடன், இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோ (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஹரிஹரன் ராமின் வாழ்க்கையில் நடந்த, நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தை டாக்டர்.D.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE