5.2 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

First Pan Indian Tamil Movie “Kanguva”!

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாகவும் கலக்கும் சூர்யா என இரு கதாப்பாத்திரங்களில் தொன்றும் சூர்யா, திரையில் மேலும் பல விதமான கெட்டப்களில் தோன்றவுள்ளார். கதை, பிரம்மாண்டம், விஷுவலாக மட்டுமல்லாது, இது உண்மையில் சூர்யா ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும்.

3 வருட உழைப்பு
இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து, 3 வருட கடின உழைப்பைத் தந்து, ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் பல வித திட்டமிடல்களுடன், இதுவரை ரசிகர்கள் கண்டிராத புதிய அனுபவம் தரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் கடல் கப்பல் ஆக்சன் காட்சிகள், விமான நிலைய சண்டைக்காட்சிகள் டிரெய்லரில் காட்டப்பட்டதை விட திரையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். இதைத்தாண்டிய க்ளைமாக்ஸ் காட்சி திரையில் தீப்பொறி பறக்க வைக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் பெரும் பொருட் செலவில், இந்திய சினிமா பார்த்திராத பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

தமிழின் முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. அனிமல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பாபி தியோல் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திஷா பட்டானிக்கு தென்னிந்தியாவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. சூர்யாவிற்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளது. பான் இந்திய நடிகர்கள், கண்கவர் காட்சிகள், இது வரை பார்த்திராத திரைக்களம், புதுவிதமான திரைக்கதை, பிரம்மாண்டம் என தமிழிலிருந்து முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் இறுதியில் யாருடைய கேமியோ இருக்கிறது என்பது தான், இப்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. அது சஸ்பென்ஸ் என்றாலும், அந்த கேமியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பைவிட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று இயக்குநர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

படத்தின் சிஜி, பழைய காலகட்டம், மாடர்ன் உலகம் எல்லாமே மிகத் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பம் அத்தனை தெளிவாக அனைவரையும் அசத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. “கங்குவா” உங்களை ஒரு புதிய மாய உலகிற்குள் அழைத்துச் செல்லும்.

கங்குவா முன்னெப்போதும் இல்லாத அளவில், உலகமெங்கும் நாளை 10,500- 11,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இதுவரையிலான இந்திய சினிமா சாதனைகளை, இப்படம் உடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

“கங்குவா” கொண்டாட்டத்திற்கு இப்போதே நீங்களும் குடும்பத்தோடு தயாராகுங்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE