ஆஹா OTT வெளிவந்து இருக்கும் எமோஜி வெப் சீரியஸ் மிகவும் சிறப்பாக உள்ளது என்று சொன்னால் மிகையாகாது நவீன நாகரிகத்தின் அம்சத்தை சொல்லும் படமாக மைந்துள்ளது.தொடரின் மிக பெரிய பலம் என்று சொன்னால் அது இயக்குனர் காலத்துக்கு ஏற்ப கதை களம் அற்புதமான திரைக்கதை இதற்க்கு உயிர் கொடுத்து இருக்கும் மஹத் மற்றும் இரண்டு நாயகிகள் அழகிலும் சரி நடிப்பிலும் நம்மை சுண்டி இழுக்கிறார்கள். மஹத்தின் எதிர் பிளாட்டில் குடியிருக்கும் தேவிகா சதீஷ், ஒரு மாடலுடன், அந்த கதாபாத்திரத்தை ஒரு ஆண் மாடலாக அமைத்திருப்பது ஒரு பெரிய ஆறுதல் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்தளவுக்கு எந்தவிதமான உணர்வு புரிதல்களும் இல்லாமல் உடலுறவு உடலுறவு என்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு ஒரு வாழ்க்கை.இரண்டு பிரேக் அப்புகளுக்கு பிறகு, மஹத் மற்றும் தேவிகா இடையிலான திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையாவது ஒரு நீண்ட நம்பிக்கை தரக்கூடிய தாம்பயத்திற்கு அவர்களை இட்டுச்செல்லும் என்று பார்த்தால் அதுவும் புட்டுக்கிட்டு போகாத குறையாக இறுதி எபிசோடு அமைந்திருக்கிறது.ஏன் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதே எமோஜியின் யதார்த்தமான கிளைமாக்ஸ். தேவிகா சதீஷ், மானசா செளத்ரி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.ரொமான்ஸிலும் சரி கிளாமரிலும் சரி அடடடா என்ன ஒரு அழகான நடிப்பை கொடுத்துள்ளனர்.தேவிகா ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார்.அழகான இதழ்கள்.. கண்கள்… க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ்… என வெளுத்து கட்டிவிட்டார்.நிற்கும்போது காதலன் தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது.. திடீரென ஓடி வந்து இடுப்பில் ஏறி கொள்வது.. என ரொமான்டிக் வெரைட்டி காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார் தேவிகா சதிஷ்..இவர்களுடன் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வரும் பெற்றோர்கள் & நண்பர்கள் என அனைவரும் இணையத் தொடரின் கதை ஓட்டத்திற்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.இசையமைப்பாளர் இசை பாடல்கள் பின்னணி இசை அனைத்தையும் இன்னும் முனைப்போடு வாசித்திருக்கலாம்.இந்த இணையத் தொடரில் ஒளிப்பதிவாளர் ஜவந்தர் வாசன் ஒவ்வொரு ப்ரேமிங்கும் எவர்க்ரீன்! ஸ்க்ரீனில் எவரைப் பார்த்தாலும் அழகாகவே இருக்கிறது.இதனை இயக்குனர் ரங்கசாமி தற்போது உள்ள இந்தக் காலத்திற்கு ஏற்ற காதல் கதையை தத்ரூபமாக கூறிஉள்ளார்.
