பப்பில் இசை வாசித்தும் அங்கு வரும் பெண்களுடன் சுற்றித்திருந்து பெங்களூருவில் 33 வயது வாலிபனாக, வலம் வருகிறார் நாயகன் கார்த்திக். காதல் மீதும், கல்யாணம் மீதும் நீண்டகால ரிலேஷன்ஷிப் மீதும் நம்பிக்கை இல்லாத ஒருவர் தான் கார்த்திக்.நாயகன் கார்த்திக்.. அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாத நடிப்பு. இவரது குரல் இவருக்கு செம பிளஸ். ஒரே படத்தில் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்திருப்பதால் நடிப்பில் பெரிய கவனம் செலுத்தவில்லை போலும்.ஸ்ரீதா சிவதாஸ். – இயக்குனர் நினைத்திருந்தால் கவர்ச்சியை அள்ளிவிட்டு இருக்கலாம். ஆனால் படம் முழுவதும் நாயகி பக்கா குடும்ப பெண்ணாகவே வருகிறார். அதை நிச்சயம் பாராட்டலாம். நடிப்பில் ஓகே.காதல் குறித்தும் ஆண் பெண் உறவு குறித்தும் அவர் பேசும் விசயங்கள் நீண்ட விவாதங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது.வயது கூடக்கூட எண்ணங்கள் மாறும் எனும் கருத்தைச் சொல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மூலம் அதிரவைத்திருக்கிறார் இயக்குநர்.வாழ்க்கையின் மேல் ஒரு பயம் இல்லாமல், தன் ஆசைகளுக்கிணங்க வாழ்த்துக் கொண்டு. பெங்களூரு வாழ்க்கையை வாழும் வாலிபனாக கதாபாத்திரத்தில் ஒன்றி வாழ்ந்திருக்கிறார் கார்த்திக். நிஜமாகவே கார்த்திக்கு இது முதல் படம் தானா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் அப்படியான யதார்த்த உடல்மொழியும் நடிப்பும்.பலவித எமோஷன்களை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்.கார்த்திகின் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் மணிகண்டனுக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளார். உடன் நடித்திருக்கும் கலைஞர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.
Doodi
0
265
Previous article
Next article