ஒரு படத்தில் மூன்று இடத்திலாவது மனதை தொடும் காட்சிகள் இருந்தால் போதும் அது ரசிகர்களை கவரும் படைப் பாக மாறிவிடும் அந்த தருணம் டான் படத்தில் பொருத்தமாகாவே அமைந்தி ருக்கிறது.கல்லூரியில் டான் ஆக உலா வரும் சிவகார்த்திகேயன் செய்யும் சேட்டைகள் கல்லூரி வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. அவருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் நடக்கும் மோதல் படுவிறுவிறுப்பு .
முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளால் நிறைந்துள்ளது. காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக அறிமுகமாகும் எஸ். ஜெ. சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எஸ்ஜே சூர்யாவை வெளியில் அனுப்ப சிவகார்த்திகேயன் போடும் திட்டம், காலேஜ் கல்ச்சுரல் டான்ஸ் என முதல் பாதி எங்கும் போரடிக்காமல் நகர்கிறது. ஜாலியோ ஜலபுல ஜங் மற்றும் பிரைவேட் பார்ட்டி மற்றும் பே விசுவல் ட்ரீட் ஆகா உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து இந்த படத்தில் ஸ்கோர் செய்வது எஸ்ஜே சூர்யா தான். காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக தொடங்கி பிரின்சிபால் ஆக இந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் பண்ண முடியாத அளவிற்கு தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார்.சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இடையில் நடக்கும் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக உள்ளது, இருவருக்கும் போடப்பட்ட மேக்கப்கள் அவ்வளவு உறுத்தலாக இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பிளஸ். சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவாங்கியின் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக உள்ளது. இரண்டாம் பாதி முழுவதும் வரும் சூரி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி தன்னுடைய மற்றொரு பெஸ்ட் பெர்பார்மன்ஸை இப்படத்தில் கொடுத்துள்ளார். முதல் பாதி படு ஜாலியாகவும் இரண்டாம் பாதி அதே அளவிற்கு சீரியஸாகவும் நகர்கிறது. தான் என்னவாக ஆகவேண்டும் என்று சிவகார்த்திகேயன் முடிவெடுக்கும் காட்சி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி, ஏற்கனவே செய்த கதாபாத்திரம் போல இருந்தாலும் முற்றிலும் எதிர்மறையான நடிப்பில் அதை வேறுபடுத்தி காட்டிவிடுகிறார். அம்மா ஆதிராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சூரி, யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் வந்து ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார். நம்மவர் கரண் & கோ வை நினைவுபடுத்தாவிட்டாலும், ராஜு, ஷாரிக்கும் நன்றாக வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். சிங்கம் புலி கூட வழக்கத்திற்கு மாறாக வசீகரிக்கின்றார்.விளம்பரப்பிரியராக வரும், கல்லூரி நிறுவனர் ராதாரவியும் சிறப்பாக மனதில் பதிந்துவிடுகிறார்.
இளைஞர்களின் பல்ஸ் பிடித்து இசைக்குக் அனிருத் இதிலும் அட்டகாசமான இசையை வழங்கியிருக்கிறார்.