8.1 C
New York
Sunday, March 16, 2025

Buy now

spot_img

Disney+ Hotstar Releases Theme Song for Hotstar Specials “Heartbeat” Series!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.

சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும்.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE