27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

Devi(L) Tamil

"நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை, திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர்..." என்கிறார் 'தேவி' படத்தின் இயக்குனர் விஜய்

தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் 'தேவி'. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தேவி என்பது குறிப்பிடத்தக்கது. 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபு தேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் 'தேவி' திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க, பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களிலும், நாசர், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, திறமையான தொழில் நுட்ப கலைஞர்களான சாஜித் - வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா (இசையமைப்பாளர்கள்), கோபிசுந்தர் (பின்னணி இசையமைப்பாளர்), மனுஷ் நந்தன் (ஒளிப்பதிவாளர்), ஆண்டனி (படத்தொகுப்பாளர்), நா முத்துக்குமார் (காலம் சென்ற உன்னத கவிஞர்), மனோஹர் வர்மா (ஸ்டண்ட் மாஸ்டர்) மற்றும் பிரபு தேவா - பரேஷ் ஷிரோத்கர் (நடன இயக்குனர்கள்) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

2016 ஆம் ஆண்டின் சிறந்த திரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் உருவெடுத்து இருக்கும் தேவி படத்தின் மியூசிக் வீடியோவானது நேற்று சென்னையில் உள்ள ஜி ஆர் டி ஹோட்டலில் வெளியிடப்பட்டது. விமர்சையான முறையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் தேவி படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ், இயக்குனர் விஜய், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர் ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் (பிரபு தேவா ஸ்டுடியோஸ்) ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

"மற்ற எல்லா திகில் திரைப்படங்களிலும் இருந்தும் எங்களின் தேவி திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும்... சில வருடங்களுக்கு முன்பு வரை ரசிகர்கள் சிறந்த குடும்ப திரைப்படங்களை காண அதிக ஆர்வம் காட்டி வந்தனர், ஆனால் தற்போது பேய் படங்களை குடும்பத்தோடு சென்று காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில், இயக்குனர் விஜய் அவர்களின் அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் இந்த தேவி திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்..." என்று கூறுகிறார் ஆர் ஜே பாலாஜி.

"பள்ளிக்கு சென்ற தங்களின் முதல் நாள் அனுபவத்தை யாராலும் என்றுமே மறக்க முடியாது.... என்னை பொறுத்த வரை, தமிழ் சினிமா தான் என்னுடைய பள்ளிக்கூடத்தின் முதல் நாள்...என்றுமே என் மனதோடு ஒட்டி இருக்கிறது...இதுவரை ரசிகர்கள் என்னை ஒரு சராசரி வில்லனாக தான் பார்த்து இருக்கிறார்கள், ஆனால் தேவி படத்தின் மூலம் என்னை ஒரு ஸ்டைலான வில்லனாக ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்..." என்று கூறுகிறார் தேவி படத்தின் வில்லன் சோனு சூட்.

"இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக மும்மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் எங்களின் தேவி திரைப்படம் அறுபது நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது... இதற்கு முழு காரணம் இயக்குனர் விஜய் தான். ஒரே நாளில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் எங்கள் தேவி திரைப்படத்தை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது...." என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் டாக்டர் கே கனேஷ்.

"தேவி திரைப்படத்தின் கதையை என்னிடம் விஜய் சார் சொல்ல ஆரம்பித்த 15 வது நிமிடம், நான் தேவியாக மாறி விட்டேன்... அந்த அளவிற்கு இந்த படத்தின் கதைக்களம் வலுவானதாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பாளி விஜய் என்பதை தாண்டி அவரை ஒரு உன்னதமான மனிதராக தான் நான் பார்க்கிறேன்...' என்று கூறுகிறார் தமன்னா.

"ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் 'பிரபு தேவா ஸ்டுடியோஸின்' முக்கிய கடமை... அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் தேவி... அதனை தொடர்ந்து பிரியதர்ஷன் சாரின் 'சில சமயங்களில்', ஜெயம் ரவியின் 'போகன்' மற்றும் 'விநோதன்' ஆகிய சிறந்த படங்கள் அநத வரிசையில் இணைய தயாராகி வருகிறது... ஜெயம் ரவிக்கு அடுத்த ஒரு தனி ஒருவன் திரைப்படமாக போகன் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்..." என்று கூறினார் பிரபு தேவா.

'என்னுடைய எல்லா திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் கவிஞர் நா முத்துக்குமாரின் பங்களிப்பு கட்டாயமாக இருக்கும்... ஆனால் என்னுடைய சிறந்த நண்பரான அவர் தற்போது இல்லாததை நினைத்து வருந்துகிறேன்.... அவருடைய ஆசீர்வாதம் எங்கிருந்தாலும் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது.

தேவி திரைப்படத்தில் எனக்கு பக்கபலமாய் இருந்த தயாரிப்பாளர் கணேஷ் அங்கிள், பிரபு தேவா சார், தமன்னா, சோனு சூட், நாசர் சார், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பிரபு தேவா சார் பற்றியும் தமன்னா பற்றியும் நான் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர்... அதே போல் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தமன்னா...நிச்சயமாக அவருடைய தேவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெறும் என்று முழுமையாக நம்புகிறேன்...." என்று கூறினார் தேவி படத்தின் இயக்குனர் விஜய்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE