காதல் படம்னாலே வில்லன்கள் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, இந்தக் காதல் படத்துல வில்லனே கிடையாது. காதலுக்கு காதலிக்கிற நாயகிதான் கொஞ்சமே கொஞ்சமான வில்லி. அதுவும் அவங்க குணத்தால, சுயநலத்தால வர வில்லத்தனம்.
ஹரீஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்தில் பாடல்கள் பலராலும் வரவேற்பு பெற்றுள்ளது. இசைக்கு ஏற்றவாறு படத்தின் பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணும், தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு பெண்ணும் சந்திக்கும் படமே ’தேவ்’.
சாகச விரும்பியான தேவ்,வாழ்கை வாழ்வதற்கு என்று ஜாலியான மனிதர் எதையும் ஈசியாக எடுத்து கொள்ளும் வாலிபர் அவர் வாழ்கையில் ஆண்களையே பிடிக்காமல் வாழும் பெண் இளம்வயதில் தொழில்துறையில் பல சாதனை செய்து வரும் மேக்னாவை சந்திக்கிறான். காதலை கண்டால் விலகும், ஆண்களை வெறுக்கும் மேக்னா தேவ்வை ஏற்றுக்கொள்கிறாளா? என்பதே படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் கலர்ஃபுல் காதல் படம் தான் தேவ். நடிகர்கள் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் முதன்மையான கதாபாத்திரங்களில் ஏற்றுள்ளனர். பாகுபலி படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அழ வேண்டாம், அதிகமா சிரிக்க வேண்டாம், அப்படியே ஒரு டிராவல் பண்ற மாதிரி ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
தமிழ் சினிமாவில் வெளியாகும் கமர்ஷியல் படங்களில், கதாநாயகி கதாபாத்திரம் சற்று மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஆனால் அந்த வழக்கத்தை தேவ் படம் தகர்த்திருக்கிறது. இந்த படத்தில் மேக்னா என்ற வலுவான கதாபாத்திரம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.இதுவரை கவர்ச்சி பொருளாக இருந்த ரகுல் தன் நடிப்பின் மூலம் மிரட்டுகிறார்.
படத்திற்கு பாடல்கள் பக்க பலம் தான் என்றாலும், படத்தோடு பார்க்கும் போது அவை சற்று ஸ்பீடுபிரேக்கர் போல உணரச் செய்கின்றன. அதேபோல படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. படத்தின் இரண்டாம் பாகத்தி அதிக கவனம் செலுத்திய இயக்குனர் முதல் பாகத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சுவாரியசமாக இருந்து இருக்கும்
தேவ் படத்தில் ஒரு கட்டத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் கார்த்தி, அடேகப்பா மிகவும் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார்.கிளைமாக்ஸ் காட்சி மிகவும் உருக்கமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தின் வசனம் படத்திற்கு வலு. சேர்த்து விடுகிறது.நட்பு தன் நம்பிக்கை காதல் பாசம் என்று பலகோணங்களில் நம்மை சிந்திக்க வைக்கிறார் அதோடு ரசிக்கவும் வைக்கிறார் இயக்கினர்.
காதல் படங்களை கொண்டாடும் இந்திய சினிமாவின் வரலாற்றில் ’தேவ்’ படம் பதிவு செய்யும் வெற்றி என்ற நம்பிக்கையை நிச்சயம் கொடுக்கும்.