0.7 C
New York
Tuesday, January 14, 2025

Buy now

spot_img

D. Iman celebrated Pongal festival with Usilambatti villagers & children !!

இந்த ஆண்டு பொங்கல் விழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் & குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான் !!

—-+++++++——-++++++++—-

FRIENDS FILM FACTORY யுடன் இணைந்து
இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் மற்றும் குழந்தைங்களுடன் கொண்டாடியுள்ளார் இசையமைப்பாளர் – D. இமான் . இது பற்றிய விவரம் வருமாறு :-

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய இன்னிசை பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் , உசிலம்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை ஒட்டி அப்பகுதி கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தன் வாயிலாக ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டும் வருகிறார். பல தரப்பட்ட உதவி கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உதவிகள் செய்வதுடன், பலருக்கும் பலவிதமான உதவிகளை தானே தேடிப்போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் D..இமான் அவர்கள் ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை இந்த தைத்திருநாளில் ஊக்குவித்தது உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM மற்றும் BUTTERFLY NETWORK TEAM ஆகிய இரு நிறுவனங்களும் இசையமைப்பாளர் D. இமானுக்கு உறுதுணையாக இருந்து, உசிலம்பட்டி மக்களுடன் அவர் ஐக்கியமாக முக்கிய காரணியாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE