15.6 C
New York
Friday, May 9, 2025

Buy now

spot_img

Cook with Komali Pugazh’s Balamuruganin Kudukalam

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்

பால முருகன் - அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும்

“பாலமுருகனின் குதூகலம்”

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் - உலகநாதன் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு - மணி பெருமாள்
இசை - பிஜார்ன் சுர்ராவ்
படத்தொகுப்பு - மப்பு பிரகாஷ்
கலை - L.கோபி MFA
சண்டைப்பயிற்சி - Danger மணி
நடனம் - அப்சர்
நிர்வாக தயாரிப்பு - அம்பிகாபதி.M

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE