16.2 C
New York
Thursday, May 15, 2025

Buy now

spot_img

“Company” Audio Launched by Bharathiraja

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். பாடல் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும் போது தன்னடக்கத்தோடு பேசினார். அது தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள் ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்.

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜான், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம்.  நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்க கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE