சராசரி ஊரில் வசிக்கும் செந்தில் நாதன் இயற்கை வைத்தியம் பார்ப்பதுடன் இயற்கை உணவகம் நடத்துகிறார். இங்கிலீஷ் வைத்தியத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி பிரசவ வலியால் துடிக்க அவரை அவரது பெற்றோர் மருத்து வமனையில் சேர்க்கின் றனர். ஆபரேஷன் மூலம் நடக்கும் பிரசவத்தில் தாய் இறக்கிறார். இதனால் கோபம் அடையும் செந்தில் நாதன் மனைவியின் பெற் றோரிடம் கூபித்துக் கொள்வதுடன் தனது மகளை தன் கண்காணிப் பில் வளர்க்கிறார். இந்நிலையில் இயற்கை மருத்துவம் பற்றி குறிப்புகள் எடுக்க செந்தில்நாதன் வீட்டுக்கு வருகிறார் அர்ச்சனா சிங். அவர் செந்தில்நாதன் குழந்தையை திருவிழா வுக்கு அழைத்து செல்கிறார். அங்கு ஒரு கும்பல் குழந்தையை கடத்துகிறது. அவர்களை பின்தொடர்ந்து துரத்துகிறார் செந்தில் நாதன். ஆனால் அவரை அடித்துபோடுவிட்டு குழந்தையை கடத்துகின் றனர். அவரால் குழந்தையை மீட்க முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.
சின்னஞ்சிறு கிளியே படம் இங்கு வெளியாவதற்கு முன்பே சர்வதேச அளவில் பல நாடுகளில் நடந்த போட்டிகளில் திரையிடப் பட்டு பல்வேறு விருதுகளை தட்டி வந்திருக்கிறது.
இயற்கை வைத்தியம் பற்றி ஒருபக்கம் படம் பேசுகிறது. இன்னொரு பக்கம் குழந்தைகளின் நலன் பற்றி பேசுகிறார் ஹீரோ செந்தில் நாதன், தன் மகளை பள்ளியில் சேர்க்க அழைத்துச் செல்லும் அவர் பள்ளியில் சொல்லும் கண்டிஷன்களை கேட்டு அதிர்ச்சி அடைந்து அங்குள்ள மிஸ்ஸுக்கு அட்வைஸ் செய்து விட்டு இந்த பள்ளிக்கூடமே வேண் டாம் என்று அங்கிருந்து குழந்தையுடன் வெளியேறு வது கலகலப்பு.
எதிர்பாராதவிதமாக திருவிழாவில் குழந்தை கடத்தப்படுவது ஷாக். கடத்தல்காரர்களை செந்தில்நாதன் துரத்தி சென்று தாக்கி குழந்தையை மீட்க முயல்வதும் அவரை அடித்துப்போட்டுவிட்டு.குழந்தையை கடத்தி செல்வதும் ஹீரோயிசம் இல்லாமல் தத்ரூபமாக படமாக்கப்பட்டி ருக்கின்றது.
சாண்ட்ரா நாயர் தென்றா லாய் சிரிப்பு வீசி கவர்கிறார். குழந்தை பதிவத்தினி சுட்டித்தனங்கள் செய்து மனதில் இடம்பிடிக்கிறார். மற்ற நட்சத்தி ரங்களும் தங்கள் பங்கை கச்சிதமாக வழங்கி உள்ளனர்.
இசையும், ஒளிப்பதிவும் படத்துக்கு கைகொடுக் கிறது.
இயக்குனர் சபரிநாதன் முத்துப்பண்டியன் ஒரு குடும்பத்தின் மெல்லிய உணர்வுகளையும், தந்தை மகள் பாசத்தையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்
