23.5 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Chandini in new thriller “Aila”

 
'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..! 
 
சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..
 
அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’  என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். 
 
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன்  பிரான்ஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர்,ஜே.ரவீந்திரன்  சுவிஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர். 
திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி  நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர். 
தற்சமயம்  இருவரும் பிரான்ஸ், சுவிஸ்  & இந்தியாவில் Resort and Restaurant  நடத்தி வருகிறார்கள்.
 
ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன். 
 
பிரபல   இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
 
இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ்  I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
 
விரைவில்  இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE