24.6 C
New York
Sunday, May 28, 2023

Buy now

Bigil

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாக்கியதுடன், இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் மைக்கல் விஜய். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில் அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.

அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக மாறுகிறார்.

ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் படமாக பார்க்கும் போது அங்கும் இங்கும் எமோஷ்னல் ஒர்க் ஆகியுள்ளதே தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.

அதிலும் படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து அட புட்பால் மேட்சுக்கு போங்கப்பா என்று சொல்ல வைக்கின்றது. அதே நேரத்தில் மேட்ச் வரும்போது எட்ஜ் ஆப் தி சீட் வருவோம் என்று பார்த்தால் மாற்றி மாற்றி கோல் அடிக்கிறார்களே தவிர நமக்கு எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை, இதற்கு சக்தே இந்தியாவும் ஒரு காரணம்.

படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமேக்ஸில் தன் அணியை திட்டி வெறுப்பேற்றுவது, அதிலும் அந்த குண்டம்மா விஷயம் என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.

மேலும் விஜய் காமெடி செய்யும் போது சென்னை ஸ்லாங்கில் பேசுவது, சீரியஸாக பேசும் போது நார்மல் தமிழில் பேசுகிறார். புல்லிங்கோவை கௌரவப்படுத்துகிறோம் என்று தொடர்ந்து தமிழ் சினிமா கிண்டல் மட்டுமே செய்து வருகின்றது.

படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை மாஸுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் எமோஷ்னல் காட்சிக்கு சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles