3.9 C
New York
Monday, March 24, 2025

Buy now

spot_img

Bharath’s “Pottu” Releasing in 1000 theaters on 8th march

 1000 திரையரங்குகளில் பரத் நடித்த “ பொட்டு “

                        மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்   -  செந்தில்   /   ஒளிப்பதிவு   -   இனியன் ஹரீஷ்                        

இசை   -  அம்ரீஷ்   /   பாடல்கள்   -  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்               

 ஸ்டன்ட்   -  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   -  எலீசா                                            

கலை  -  நித்யானந் /நடனம்    -  ராபர்ட்                                                    

தயாரிப்பு மேற்பார்வை  -  ஜி.சங்கர்                                                          

தயாரிப்பு  -  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்                                                            

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  -  வடிவுடையான்.      

பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ்    ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த  படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார் இயக்குனர் வடிவுடையான்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE