10.5 C
New York
Saturday, May 10, 2025

Buy now

spot_img

Bhai – Sleeper Cell = A film targeting Muslims?

பாய் - Sleeper Cell Trailer இணையதளத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

பாய் - Sleeper Cell = இஸ்லாமியர்களை குறி வைக்கும் படமா?

பாய் - Sleeper Cell Trailer வசனங்கள் மற்றும் காட்சிகள் சர்ச்சை.

கோவை வெடிவிபத்தை பேசும் படமா இந்த பாய் - Sleeper Cell?

மூன்று இடங்களில் bomb blast உறுதி என்ற வசனத்தைக்கொண்டு Church மற்றும் கோவில் visual - உடன் trailer ஆரம்பம் ஆகிறது.

எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper - ல் எழுதியிருப்பது )

நான் மதம் மாறனுமா?

இஸ்லாமிய பெண் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருப்பது.

பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க இறுதியில் Maruthi car- ல் குண்டு வெடிப்பு அதில் 1998- ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும் வசனம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maruthi car குண்டு வெடிப்பு சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை நினைவூட்டுகிறது இது ஒருபுறம் இருக்க, ஒட்டு மொத்த உலகையுமே புரட்டி போட்ட கோவை 1998 குண்டு வெடிப்பு இந்த இரண்டு சம்பவத்தையும் இணைத்து உருவாகியிருக்கும் படமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது?

காஸ்மீர் files மற்றும் the kerala stories போன்ற சர்ச்சைக்குறிய படங்களின் வரிசையில் Bhai - Sleeper cell இருக்கும் என்ற பரவலான பேச்சும் மக்களிடையே வளம் வருகிறது.

இத்தனை சர்ச்சை கேள்விகள் இருந்தாலும்… Bhai - Sleeper Cell Trailer ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.பாய் - sleeper cell திரைப்படம் டிசம்பர் 28- ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE