22.7 C
New York
Monday, May 16, 2022

Buy now

Beast

பீஸ்ட் விமர்சனம்
இந்திய ராணுவத்தில் ரா பிரிவு அதிகாரியாக பணியாற்றும் விஜய், அதிகாரிகள் செய்த தவறால் அங்கிருந்து சென்னைக்கு வருகிறார் . இங்குள்ள ஒரு மாலில் 250 பேரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவர்களின் தலைவனை விடுவிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். எதேச்சையாக அந்தமானில் சிக்கிக்கொள்ளும் விஜய் அந்த தீவிரவாதிகளிடமிருந்து எப்படி பொதுமக்களை காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை.
வழக்கமாக விஜய் படம் என்றால் ஐந்து ஆறு பாடல்கள் இருக்கும். ஓப்பனிங் பாட்டு நிச்சயமாக இருக்கும் . பஞ்ச் டயலாக் இருக்கும் . வில்லன்களை அடித்து பந்த் ஆடுவார். இப்படி எல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு சென்றால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் இருக்கும். வழக்கமான விஜய் படத்திலிருந்து இது வேறுபட்டுள்ளது. இது விஜய் படம் என்று சொல்லாமல் இயக்குனர் நெல்சன் படம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு 🙏படத்திலும் தனது உடலையும் அழகையும் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார் விஜய். இதில் ஒவ்வொரு காட்சியிலும் ஹாண்ட்சம் ஆக உள்ளார். ரா அதிகாரியாக நடித்துள்ள அவர் தீவிரவாதிகளை பொட்டலம் கட்டி தூக்கி வருவது சற்று லாஜிக் மீறல் ஆக இருந்தாலும் சினிமா என்ற கோணத்தில் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து உள்ளார்.விஜய்க்கு சரியான ஜோடியாகவே திரையில் தெரிகிறார். படத்தை எங்கும் தொய்வு ஏற்படாமல் விடிவி கணேஷ் கிங்ஸ்லி யோகி பாபு சதீஷ் ஆகியோர் தாங்கி பிடித்துள்ளனர். அவர்களின் காமெடி கலாட்டா ரசிக்கும்படியாக உள்ளது. அடுத்து படத்திற்கு பில்லர் ஆக இசையமைப்பாளர் அனிருத் உள்ளார். ஏற்கனவே மெகா ஹிட்டான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக பின்னணி இசை வேற லெவல்.
கோலமாவு கோகிலா டாக்டர் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள பீஸ்ட் படம் அவருடைய பாணியில் இருந்தாலும் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் ஆக்சன் காட்சிகள் உள்ளன. அனிருத் இசை இயக்குனருக்கு பக்கபலம் என்றாலும் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,309FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE