டைம் மிஷின் கான்செப் சொல்லி தனி – சோனலை வளையில் விழவைக்கும் காட்சிகள் செம்ம கியூட். சோனல், சினிமா கவர்ச்சிகள் இல்லாத இயல்பான அழகி. காசியில், கங்கை நதிக்கரைகளில் இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு சிறப்பான அதே நேரம் மிகவும் புதுமையான, ஆரோக்கியமான விருந்து.காதல் டைம்டிராவல் ஆன்மீகம் என வித்தியாசமான கலவையில் இப்படத்தை ஆன்மீக பூமி காசி, பனாரசில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயதீரா.காதல் படத்தில் திடீரென்று டைம் டிராவல் கதையை புகுத்தி களத்தை கிரைம் ஸ்டோரியாக மாற்றியதும் மாநாடு பட பாணியில், நடந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வரும்போது பரபரக்கிறது.ஜயீத் கான் அறிமுகம் என்றே சொல்ல முடியாமல் அத்தனை அனுபவ நடிகராக தெரிகிறார். அவரது ரொமான்டிக் நடிப்பும், இளமைத் துடிப்பும் அசத்தல். சண்டைக் காட்சிகளிலும் சத்தாய்க்கிறார்.தன்னுடைய அண்ணன் மகளை ஏமாற்றிய ஜையத்தை சும்மா விட்டுவிடுவாரா, உயிரில் தொழில் நுட்பத்தில் பேராசிரியராக இருக்கும் அச்யுத் குமார். அவர் காட்டும் அட்டகாசமான ஆட்டம் தான் படத்தின் இரண்டாம் பாதி.ஜயீத்தின் பனாரஸ் நண்பராக வரும் சுஜய் சாஸ்திரி கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் காமெடியனாக இருந்தாலும் படம் முடியும்போது கலங்க வைக்கிறார்,டைம்டிராவல் காட்சியில் காதலி குடும்பத்தை ஹீரோ காப்பாற்ற முயல்வது விறுவிறுப்பக இருந்தாலும் கடைசியில் எப்படி முடிப்பது என்று தெரியாமல் இயக்குனர் தடுமாறியிருப்பதால் திடீர் திருப்பம் இல்லாமல் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார். ஆனாலும் காதலை ஆன்மீகத் தேடலாக மாற்றியிருக்கிறார்,திரும்பும் இடமெல்லாம் தெய்வீக மணம் வீசும்படியாக காசி, பனாரஸ், கங்கை அழகை கண்குளிர படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர.ர் அத்வைதா குருமூர்த்தி.இரண்டாம் பாதி கதையை நம்ம மாநாடு வெங்கட் பிரபு எழுதி இருப்பாரோ என்று தோன்றினாலும், அதைவிட இன்னொரு அறிவியல் கற்பனையை கலந்து கொடுத்துக் கதையை முடிக்கிறார் இயக்குனர்.
Banaras
0
290
Previous article
Next article