ஜிவி பிரகாஷ் மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய கருவிகளை கண்டுபிடித்து, அதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக உரிய அலுவலகத்துக்கு சென்று தனது கண்டுபிடிப்புகளை விளக்கும் ரோலையும். பல அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர்களின் முயற்சி வீணாக்கப் படுவதை தத்ரூபமாக வெளிக்காட்ட முயன்று இருக்கிறார்.
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறார். அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
படத்தின் முக்கிய வில்லனாக வட நாட்டு கொள்ளையனாக சித்தார்த். தோற்றத்திலும், பார்வையிலுமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முயன்றால் இன்றைய இளம் வில்லன்கள் பஞ்சத்தைப் போக்கலாம். ஜிவி பிரகாஷின் நண்பனாக காயலான் கடை வைத்திருக்கும் காளி வெங்கட். ஜிவி பிரகாஷின் அப்பாவாக ஆடுகளம் நரேன், லஞ்சம் வாங்கும் ஆய்வாளராக ஹரிஷ் பெராடி அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.நகைக்கடைகளில் வெறித்தாக்குதல் நடத்தி காவலாளிகளை கொன்று பலகோடி நகைகளை திருடும் சித்தார்த் ஷங்கர் தலைமையிலான கும்பல்.மக்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும் ரசாயனங்களை செலுத்தி கோழிப்பண்ணை நடத்தி அது ஜீவி பிரகாஷ் மூலம் இழுத்து மூடப்பட அவரை பழிவாங்கத்துடிக்கும் அபிஷேக்.முடிவில், அரசு இயந்திரங்களுடன் போராடி தான் கண்டுபிடித்த ஒரு இயந்திரத்தை வைத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையையும் காப்பாற்றி நகைக்கடத்தல் கொள்ளையர்களையும் கண்டுபிடிக்கும் இளம் விஞ்ஞானி ஜீவி பிரகாஷ் குமாருக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் ரவி அரசு.ஐங்கரன் போட்டிகள் நிறைந்த இந்த நவீன மக்கள் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக வெளிவந்திருக்கிறது.எடுத்துக் கொண்ட கதையை வலுவாகவும், நம்பகத்தன்மையுடனும் வழங்கி டைரக்டர் படமென்பதை நிரூபித்து விட்டார்