E5 ENTERTAINMENT மற்றும் IMAGINARY MISSIONS பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும்
“அட்டி” படத்தில் கானா பாடகராக மா.கா.பா நடிக்கிறார்
நாயகனாக மா.கா.பா மற்றும் நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும்,நான்
கடவுள் ராஜேந்திரன்,அருள்தாஸ்,ராம்ஸ்,அழகு,கலை,மிப்பு,தங்கதுரை,யோகிபாபு ஆகியோரும்
நடித்துள்ளனர்.
இப்படத்திற்க்கு கதை,திரைக்கதை,வசனம்,எழுதி இயக்கியுள்ளார் விஜயபாஸ்கர்.
இப்படம் பற்றி அவர் கூறுகையில்:- இப்படம் முற்றிலும் நகைச்சுவையை மையமாக கொண்டு
அனைத்து தரப்பினர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றியுள்ள
பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமானதாக கூறும்
வகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டிருக்கும் படமே “அட்டி”.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள “அட்டி”, படத்தின் முக்கிய
சண்டைக்காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் “பவர் பாண்டியன்” அவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜீன், இசை சுந்தர்.சி.பாபு, எடிட்டிங்
M.V.ராஜேஷ்குமார், நடனம் சுரேஷ், தயாரிப்பாளர்கள் Dr.J. ஜெயகிருஷ்ணன், ஆ.கார்த்திகேயன்
இணைந்து தயாரிக்கின்றனர்.