27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

Atharvaa turns as a never compromise student in ‘OTHAIKKU OTHTHA’

The word that challenges any individual to prove his might during the days of college is a "singles" fight. This single word means a lot to the pride and honour of every student who wants to show case himself as a power centre in the college. 'OTHAIKKU OTHTHA' starring Atharvaa in the principle lead, directed by Barnesh dwells in this fire brand subject. After assisting Director Pa Ranjith in Attakaththi and Madras, Director Barnesh is now all set to venture his maiden journey to rediscover the Bold memories of college days through his debut film 'OTHAIKKU OTHTHA'. Produced by Dinesh Karthik under the banner 'Vision I Media' who had earlier produced Aranmanai, 'OTHAIKKU OTHTHA' is captured live by Ramalingam and the background scores are composed by Justin Prabhakaran. 'OTHAIKKU OTHTHA' will also have Veteran Actor Thyagarajan in a very crucial role and Anjathe Narain in a significant role.

"Universities are the place where the molding of an individual actually starts.... 'OTHAIKKU OTHTHA' is a not to be missed action entertainer that will unveil the life of Students, their Ego Clash and also about their Love life....Atharvaa has put his whole effort for this movie, and he has reduced his body weight to fit into the Student's character. It is really a tougher task to do singles with him. We are in search for a perfect match as a Heroine...." conveys Director Barnesh in a confident tone.

'ஒத்தைக்கு ஒத்த' மோத தயாராக இருக்கிறார் அதர்வா

'ஒத்தைக்கு ஒத்த' என்ற சொல் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், கல்லூரி மாணவர்களிடையே அது மிகவும் பிரபலம்....கல்லூரி நாட்களில் மாணவர்கள் மத்தியில் சண்டைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று ......அதற்கு தீர்வாக அவர்கள் கருதுவது , இந்த 'ஒத்தைக்கு ஒத்த' சண்டை முறையை தான்...அத்தகைய வலுவான கதையம்சத்தில் தற்போது உருவாக இருப்பது தான் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். இயக்குநர் பா ரஞ்சித்திடம் 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் இந்த 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை, 'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.... இவர்கள் தயாரிப்பில் ஏற்கனவே உருவான 'அரண்மனை திரைப்படம்', மாபெரும் வெற்றியை தழுவியது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் அஞ்சாதே புகழ் நரேன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

" பிறர் யாரையும் சார்ந்து இருக்காமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது தான் ஒரு மனிதனின் சிறப்பு என்பதை ஒரு மாணவன் உணரும் இடம், கல்லூரி. அத்தகைய மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, அவர்களுள் யார் வலியவன் என்பதில் ஏற்படும் சண்டைகள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் காதல்....இந்த மூன்றையும் மையமாக கொண்டு நகர்வது தான் எங்களின் 'ஒத்தைக்கு ஒத்த' . இந்த படத்திற்காக அதர்வா தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார்.....மாணவர் கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்த அவர் தன்னுடைய எடையை குறைத்தும் இருக்கிறார்....மொத்தத்தில் 'ஒத்தைக்கு ஒத்த' மோத தயாராக இருக்கிறார் அதர்வா....தற்போது கதைக்கேற்ற கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் நாங்கள் இருக்கிறோம்......." என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பர்னீஷ்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE