-5.7 C
New York
Tuesday, February 18, 2025

Buy now

spot_img

Appugutty’s “Happy Birthday” will be on the screens soon!!

தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!!

பொங்கல் வாழ்த்துக்களுடன் திரை
வெளியீட்டை அறிவித்த “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” படக்குழு !!

Plan3 Studios சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. Mathens Group இப்படத்தினை இணைந்து வழங்குகிறது.
பொங்கல் வாழ்த்துக்களுடன், பிப்ரவரி திரை வெளியீடு குறித்த, அறிவிப்பு போஸ்டரை, தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து வீட்டுப் பிண்ணணியில், அன்பான விலங்குகளுடன், கர்பிணி மனைவியை அணைத்தபடி, அப்புகுட்டி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகம் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்டஸி டிராமாவாக இப்படத்தை இயக்கியுள்ளார் ராஜு சந்ரா. மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜுசந்ராவின் முதல் தமிழ்ப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

தேசியவிருது நாயகன் அப்புக்குட்டி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார், டாக்டர் உட்பட பல வெற்றிப்படங்களில், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த நடிகை ஸ்ரீஜாரவி, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா அனில்குமார், ரோஜி மாத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, நீலா கருணாகரன், ,சுல்பியா மஜீத், இன்பரசு, ராகேந்து, விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு, வினு அச்சுதன், பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ், வினீத் ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்..

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி , ஆலியார் டேம், கேரளவிலுள்ள வாகமன் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. விரைவில் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு - Plan3 Studios
இணை தயாரிப்பு - MATHENS GROUP
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு,இயக்கம் - ராஜுசந்ரா
இசை - GKV, நவனீத்
எடிட்டர் - தாஹிர் ஹம்சா
இணை இயக்குநர் - பினு பாலன்
கலை இயக்கம் - வினோத் குமார்
உடை வடிவமைப்பு - சுல்பியா மஜீத், பக்தவச்சலன்
நடனம் - சதீஷ்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE