-7.1 C
New York
Thursday, January 23, 2025

Buy now

spot_img

Anupama Parameswaran’s New Movie “Lockdown” Produced by Lyca Productions

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்க, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்”

லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் “லாக்டவுன்”

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுடன், பல தரமான திரைப்படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “லாக்டவுன்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

புதுமையான திரைக்கதையில் லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும், ஒரு அழகான படைப்பாக உருவாகும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் A R ஜீவா இயக்குகிறார்.

“பிரேமம்” படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது தில்லு ஸ்கொயர் படம் மூலம், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

N.R.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோரின் மயக்கும் இசையுடன், K.A.சக்திவேலின் அசத்தலான ஒளிப்பதிவில், “லாக்டவுன்” ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE