இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஆர்.பாலாஜி ஒளிப்பதிவில் சிவாத்மிகா இசையில் குட்டி குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஆண்டனி
மிழ் சினிமாவில் சமீபகாலமாக புதிய தொழில்நுட்பத்தில் படங்கள் அதிகம் வருகின்றது அது எல்லமே புதிய இயக்குனர்களின் முயற்சியாகவும் அமைகிறது அந்த வகையில் தமிழின் அதாவது தமிழ் சினிமாவின் முதல் முயர்ச்சி தான் ஆண்டனி படம் இந்த இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி
கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம்.
படம் துவங்கியதுமே ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் இருந்து மயக்கம் தெளிகிறார். தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்பும் ஹீரோவுக்கு, சிறிது நேரம் கழித்துதான் காருடன் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது புரிகிறது. பதற்றமடையும் ஹீரோ தன்னை யார் இங்கு அடைத்து வைத்திக்கிறார் என புரியாமல், வெளியேற முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதற்கிடையே, ஹீரோயின் மகா, காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் முன் காத்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜிடம் தன் போகத்தை வெளிபடுத்திவிட்டு புறப்படுகிறார். இரவு முழுவதும் தன்னுடன் மது அருந்திய மகன், காலையில் திருமணத்துக்கு வராமல் எங்கே சென்றிருப்பான் என குழப்பும் ஜார்ஜ், மகனை தேடி கண்டுப்பிடிக்க புறப்படுகிறார். தந்தை ஜார்ஜ், மகனை கண்டுபிடித்தாரா?, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
ஆண்டனி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிஷாந்துக்கு முதல் படத்திலேயே கனமான பாத்திரம். மண்ணுக்குள் புதைந்து பெரும் சிரமப்பட்டிருக்கிறார். திறம்படவே நடித்திருக்கிறார்.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நல்ல ஹீரோ பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, தனக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார் .
தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட லாலுக்கு, மகனை தேடும் தந்தை பாத்திரம். அவரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். லாலுக்கு நடிப்பை சொல்லவாவேனும் நான் வில்லன் மட்டும் இல்லை நல்ல குணசித்திர நடிகனும் என்று நிருபித்துள்ளார். ரேகாவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சும்மா வந்து போகிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கம் தயாரிப்பாளர் வெப்பம் ராஜா, நடிகனாக அதுவும் வில்லனாக புது முயற்சி சிறப்பாக செய்துள்ளார்.
படம் ஆரம்பிக்கும் போது, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு மனிதனின் படப்படப்பும், மூச்சுத்தனறலும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்த அளவுக்கு காட்சி அமைப்பும் சரி நடிப்பும் தத்துரூபமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பகுதியிலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் படம் தமிழ் சினிமாவின் மேலும் ஒரு மைல்கள் என்று சொல்லும் அளவுக்கு இருந்து இருக்கும் . ஒளிப்பதிவாளர் பாலாஜியும், இசையமைப்பாளர் சிவாத்மிகாவும் தான் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்திருக்கிறார்கள். பாலாஜியின் ஒளிப்பதிவு காதல், ஃபோபியா, ஆக்ஷ்ன் என அனைத்தையும் அழகாக பிரித்து காட்டுகிறது.