11.6 C
New York
Tuesday, November 5, 2024

Buy now

spot_img

Anjali’s 50th film “Eegai” started with pooja

அஞ்சலி நடிக்கும் "ஈகை" படத்தின் துவக்க விழா.

நடிகை அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது படம் "ஈகை" சென்னையில் படப்பிடிப்போடு துவங்கப்பட்டது .

இயக்குனர் இமையம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கிரீன் அமூசிமெண்ட் மற்றும்
D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும்
இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி முன்னிலையில் துவங்கப்பட்டது.

தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த "ஈகை" என்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம்.

படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார்,
ஒளிப்பதிவு ஸ்ரீதர்,
எடிட்டர் பிரவீன் KL,
கலை - த .இராமலிங்கம்.
நடனம் - ஸ்ரீதர்
பாடல்கள் - விவேகா, அறிவு
சண்டை- கணேஷ்.

தயாரிப்பு - தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE