14.1 C
New York
Saturday, May 24, 2025

Buy now

spot_img

“ANGIKAARAM” 1st Look Released

*ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ' அங்கீகாரம் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.*

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப், போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகிவரும் அங்கீகாரம் திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் - அஜித்பாஸ்கர் - அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அங்கீகாரம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE