படத்தின் இயக்குனர் ஜெய் முதல் முயற்சி அருமை என்று தான் சொல்லணும் காரணம் கதை திரைக்கதையோடு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் வளம் வந்துள்ளார். சிறந்த ஒரு பொழுதுபோக்கு படம் தான் ஆந்திரா மெஸ்
படத்தின் கதாபாத்திரங்களும் சரி நட்சத்திரங்களும் சரி மிக அருமை இதற்கும் இயக்குனரை பாராட்டனும்.
இந்த படத்தில் ராஜ்பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர் நடிஒளிப்பதிவு முகேஷ்.ஜி பிரசாந்த் பிள்ளை இசையில் அறிமுக இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஆந்திரா மெஸ்
ஜமீன்தார் வீட்டுக்கு கொள்ளைக்கார ஆசாமிகள் நான்குபேர் வருகிறார்கள்; கொஞ்சகாலம் தங்குகிறார்கள்! அந்த நான்குபேரும் ஏதோவொரு விதத்தில் தோற்றுப் போனவர்கள் என்பதுதான் கதைக்களத்தின் மையப்புள்ளி!
ஜமீன்தார் வீட்டில் தங்குகிற நான்கு பேரில் ,வாட்டசாட்டமான ஒரு இளைஞனுக்கும் ஜமீன்தாரின் தக்காளிக்கும் தப்பான தொடர்பு ஏற்படுகிறது. அந்த தப்பை ,சரி என்கிறது அந்த தக்காளி.
இந்த நிலையில் ஜமீன்தார் என்ன முடிவெடுத்தார்? அந்த நான்கு பேரும் ஜமீன்தார் வீட்டில் தங்க வந்ததன் காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு ‘ஸ்கிரீன்பிளே’யில் பதிலிருக்கிறது.
முக்கிய கதாபாத்திரங்களில் வருகிற ராஜ் பரத், தேஜஸ்வினி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா உள்ளிட்டோரின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு!
தேஜஸ்வினி கண்களால் பேசுவதை தனியாக பாராட்ட வேண்டும்!
அறிமுக வில்லன் யே.பி.ஸ்ரீதர் அருமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சிறந்த புது வரவு
பிரசாந்த் பிள்ளையின் இசையில் குட்டி ரேவதி, மோகன் ராஜனின் பாடல்கள் ஒருமுறை கேட்டுவிட்டுக் கடந்துபோகலாம்!
கதைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஸ்கிரீன்பிளேயை ‘பிளாக் காமெடி’யாக உருவாக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெய். படத்தின் காட்சிகள் மிக அருமை ஓவியம் போல இருக்கிறது.