27.4 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Alibaba and 40 children Releasing soon

 முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும்  அலிபாபாவும் 40  குழந்தைகளும் L.G.ரவிச்சந்தர் இயக்குகிறார்

இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு   “அலிபாபாவும் 40 குழந்தைகளும் “ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா,மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு    -         சங்கர்      

இசை           -        ஜெய்குமார்

பாடல்கள்    -        யுகபாரதி

எடிட்டிங்     -        வீரசெந்தில்ராஜ்

ஸ்டண்ட் -            இடிமின்னல் இளங்கோ

நடனம்        -        தினேஷ், சிவசங்கர்.

மக்கள் தொடர்பு  - மணவை புவன் 

தயாரிப்பு மேற்பார்வை -        பாண்டியன்

தயாரிப்பு    -   இடியேட்ஸ் கிரியேட்டஸ்.

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய L.G.ரவிச்சந்தர்  கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய “ நான் அவளை சந்தித்த “ போது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கும் நான்காவது படம் இது.

படம் பற்றி இயக்குனர் பேசியதாவது...

நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். “ உழைப்பே உயர்வு உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது என்ற உலகம் அறிந்த உண்மை  தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை.

குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கிறார்கள் இவர்களுடன் பஸ் ஒன்று முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது.

படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் L.G.ரவிச்சந்தர். 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE