6.3 C
New York
Thursday, April 25, 2024

Buy now

“Akka Kuruvi” “அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.

“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

படம் குறித்து இளையராஜா கூறியதாவது…

சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை தாக்கினால் தான். இவன் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார். நான் இந்த மாதிரி புது இயக்குநர்கள் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இசையமைப்பதற்கும் காரணம் அது தான். மணிரத்னம் முதல் இசையமைத்த காரணம் அது தான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE