Yennai Arindhaal
The first vision the mighty fan base of Ajith kumar will have to see on the dawn of the new year 2015 will be the trailer of 'Yennai arindhaal' . The production house Sri Sai Raam creations officially confirmed the same to the media today. It is a double bonanza to the Huge and Hungry fan base for the fans of Ajith kumar , with both the Audio and Trailer releasing on the big day .The teaser which was released recently set the records tumbling and went on to become a huge hit . ' The plan to initiate the proceedings on the 'New year day' and storm the promotions on a bigger way. Janaury 1st being a Thursday is a perfect day for such a start. The shooting is over , and the post production work is on full progress. We are confident that the film will make this Pongal the sweetest to the fans and the general audience ' says the producer A M Rathnam with majestic pride.Big film ...Big Day and Big promotion plan.
என்னை அறிந்தால்
உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன் ஆரம்பம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்அமர்களமாக துவங்க உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன் , 'என்னை அறிந்தால்' படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால் ' திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு ,குறைந்தக் காலக் கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளி வருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும்.' புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை..படப்பிடிப்பு முடிந்து , மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது.ஜனவரி 1ஆம் தேதி வியாழ கிழமை என்பதுக் குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து இந்த பொங்கலும் 'என்னை அறிந்தால்' வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி , எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை' என்று பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம்.