14.7 C
New York
Friday, May 9, 2025

Buy now

spot_img

Aishwarya Rajesh Starrer Comedy Thriller Pooja started off well by Dwarka Productions

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!  

Dwarka Productions  தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில்,   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !!

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.

இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு - பிளேஸ் கண்ணன் (Dwarka Productions)
எழுத்து இயக்கம் - ரா.சவரி முத்து
ஒளிப்பதிவு - தமிழ் A அழகன்
இசை - D இமான்
படத்தொகுப்பு - சரத் குமார்
கலை - சுரேஷ் கல்லேரி
சண்டை - சுகன்
நடனம் - ஷெரிப்
ஒப்பனை - சுரேஷ்
ஆடை வடிவமைப்பு - ஷேர் அலி
உடைகள் - ரமேஷ்
புகைப்படம் - அன்பு
நிர்வாக தயாரிப்பு - நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை - அழகர் குமரவேல்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு - சபா டிசைன்ஸ்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE