யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில், சமிபத்தில் வெளிவந்த “சிகரம் தொடு” திரைப்படம் வசுலும், அனைவரது பாராட்டையும் பெற்றது.
சிகரம் தொடு படத்தில் தன் எளிமையான மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்றார் நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்,
பானவயலை சேர்ந்த இவர், புனேவில் உள்ள ஃப்லிம் இன்ஸ்டிடுயுட்டில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள “இடம் பொருள் ஏவல்”, சீனு ராமசாமி இயக்கும் மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும் பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கின்றார்.
சிகரம் தொடு படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம் ஒரு வௌவாலை போல தொங்கினார். தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சியை நடித்ததாகவும், அந்த காட்சியை அவரால் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில், ஒரு ரகுவரனை போல், ஒரு பிரகாஷ்ராஜை போல், தாமும் ஒரு சிறந்த நவரச நடிகாராக வரவேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறுகிறார்.
கடவுள் மற்றும் பெற்றோரின் ஆசிர்வாதத்தினாலும், சகோதரர்களின் உதவியினாலும் 2014ஆம் வருடத்தில் எனது நடிப்புக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது என்றும் 2015ஆம்வருடம் சினிமா என்னை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்.