16.1 C
New York
Saturday, April 19, 2025

Buy now

spot_img

Actor Ajai in crime thriller “Chakraviuham”

Rating 3/5

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன.
அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்".

கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை துவங்குகிறார்.
அவர் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார்.
மேலும், சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத்தை சந்தேகிக்கிறார். கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் காணாமல் போனதால், சத்யா சிரியின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது சந்தேகம் கொள்கிறார். ஸ்ரீயை உண்மையில் கொன்றது யார்? சிரியை கொலை செய்ய கொலையாளியை தூண்டியது எது? என்பதை துப்புதுலக்குவதிலிருந்து துவங்கும் படம் பரபரப்பாகிறது. அடுத்தடுத்து எதிர்பார்க்கமுடியாத திருப்பங்கள், அதிரடி சண்டைக்காட்சிகளோடு படம் வேகமெடுக்கிறது.

படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடிவு வரை வேகமான திறைக்கதையால் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார் இயக்குனர்.

படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் அதன் தன்மைக்கேற்ப பலம் கொடுக்கிறது.

க்ரைம் த்ரில்லராக மட்டுமில்லாது , நல்ல கருத்தை சொல்லும் விதமான படமாக உருவாகியுள்ளது.
அஜய், விவேக் திரிவேதி, ஊர்வசி ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.

"பேராசை அதிக துன்பத்தை தரும்" என்பதே இந்த படத்தின் மூலக்கரு.

அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.

நடிகர்கள் -
அஜய், ஞானேஸ்வரி, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு

இயக்குனர்: சேத்குரி மதுசூதன்
தயாரிப்பாளர்கள்: சஹஸ்ரா கிரியேஷன்ஸ்
இசையமைப்பாளர்: பாரத் மஞ்சிராஜு
ஒளிப்பதிவு: ஜி.வி.அஜய் குமார்
எடிட்டர்: ஜெஸ்வின் பிரபு

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE