சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த கதையின் நாயகன் கருணாஸ் மற்றும் தனது நிறை மாதம் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரித்விகாவுடன் கட்டிடம் கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.திடீரென்று கதையின் நாயகன் கருணாஸின் மனைவி ரித்விகாவுக்கு பிரசவவலி அதிகமானதால் அரசு குழந்தை பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.தன் மனைவி ரித்விகா அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டில் கதையின் நாயகன் கருணாஸ் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும்போது தன் மனைவி ரித்திகாவை காணவில்லை.தனக்கு பிறந்த குழந்தை மட்டும் அந்த வார்டில் இருக்கிறது.தனது மனைவி ரித்விகா பாதுகாப்பாக இருந்த இனியாவையும் காணவில்லை.ரித்விகா துணையாக இருந்த இனியா மருத்துவமனையின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் காவல்துறையினர் பிணமாக மீட்டெடுக்கிறார்கள்.வறுமை, வாழ்வாதாரத்திற்கு தன் தம்பி திலீபனுடன் சேர்ந்து கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இரும்பு திருடும் அடவாடி பெண்ணாக அசத்தியிருக்கிறார். அவரே தன்னை காட்டிக் கொடுத்த ரித்விகா, பிரசவத்திற்காக துடிக்கும் போது தானே ஆட்டோவில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்கிறார். எப்படிப்பட்ட மோசமான பெண்ணுக்குள்ளும் ஒரு அழகான தாய்மை இருக்கும் தானே.பாகுபலி பிரபாகரும் தலைமை ஏட்டாக அருண்பாண்டியனும் மிகச்சிறப்பாக காவல்துறை நடவடிக்கைகளை கண்முன் கொண்டு வருகிறார்கள்.பச்சமுத்தாக வாழ்ந்துள்ள கதையின் நாயகன் கருணாஸ் கைக்கழந்தையோடு தனது மனைவி ரித்விகாவை கண்டு பிடித்து தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சுவதும் அழுவதும் அவருடைய நடிப்பு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.திரைப்படம் பார்க்கும் போது ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைப்பு மிகவும் அருமையாக இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார்.
Aadhaar
0
190