11.9 C
New York
Saturday, May 10, 2025

Buy now

spot_img

A grand film awards ceremony organized by the MEI International Film Screening Committee and the University of Vels !!

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது விழா !!

சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் வருகை தந்து சிறப்பித்தனர்

மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.

மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான திரு. S. ஜெயசீலன் அவர்கள் மற்றும் P.அன்பழகன் தொலைக்குப்பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள்.

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஜூலை 19 அன்று நடத்திய மாபெரும் திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, தகுதி வாய்ந்த படைப்புகளைத் தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் திரு ஐசரி கே கனேஷ், டாக்டர். ஏ. ஜோதி முருகன் இந்த திரையிடலில் வேல்ஸ் குழுமத்தின் பங்கானது அதிகம். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் திரு ஐசரி கே கனேஷ், டாக்டர். ஏ. ஜோதி முருகன் Pro Chancellor - VISTAS, LL Pro - Chancellor Academics, Vice President of Vels Educational group, டாக்ட்ர். எஸ். ஸ்ரீமன் நாராயணன் Vice chancellor, டாக்டர். எம். பாஸ்கரன் Pro - Vice Chancellor, டாக்டர். பி. சரவணன் - Registrar - VISTAS, டாக்டர். எஸ். வளர்மதி - விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான திரு. எஸ். மனோஜ் பிரபாகர் & டாக்டர். செந்தில் குமார். ஆகியோர் இந்த திரையிடலில் மிகபெரும் பங்களித்துள்ளனர்.

சிறப்பான தமிழ்த் திரைப்படைப்புகளை மெய் குழு கண்டறிந்து அவர்களை அங்கீகரிப்பதன் நோக்கமாகவே இந்த விருது விழா துவங்கி நடத்தப்பட்டது. இன்றைய நிகழ்வில் மாணவர்களுக்குக் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இன்றைய நிகழ்வில்
விருது பெற்றவர்கள்:

  1. P S வினோத் ராஜ் – சிறந்த இயக்குனர் - கூழாங்கல்
  2. ரா. வெங்கட் - சிறந்த திரைப்படம் - கிடா
  3. கார்த்திகா வைத்தியநாதன் – சிறந்த பாடகி - சித்தா (கண்கள் ஏதோ). -
  4. தர்ஷன் - சிறந்த வில்லன் - சித்தா.
  5. மகேந்திரன் கனேசன் - சிறந்த படத்தொகுப்பாளர் - யாத்திசை
  6. இரஞ்சித் குமார் - சிறந்த கலை இயக்குனர் - யாத்திசை
  7. மதன் - சிறந்த குணச்சித்திர நடிகர் - ரணம் அறம் தவறேல்

8.அம்மு அபிராமி - சிறந்த நடிகை - கண்ணகி

  1. சேத்தன் - சிறந்த நடிகர் - விடுதலை பாகம் 1
  2. பாக்கியம் ஷங்கர் - சிறந்த நடிகர் - துணைக்கதாப்பாத்திரம் மாடர்ன் லவ் சென்னை.
  3. பிருத்வீராஜன் - சிறந்த குணச்சித்திர நடிகர் - புளூ ஸ்டார்
  4. தமிழ் அழகன் – சிறந்த ஒளிப்பதிவாளர் - புளூ ஸ்டார்
  5. Lights on Media - சிறந்த தயாரிப்பாளர் - பருந்தாகுது ஊர்க்குருவி
  6. செல்வா - சிறந்த போஸ்டர் வடிவமைப்பாளர் - பிதா

இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருது வழங்கிய
இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது…

மெய்யாலுமே சினிமாவில் இருப்பது தான் என் சந்தோசம் அந்த வகையில் மெய் நடத்தும் இந்த விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. விருது என்பது முத்தம் கொடுப்பது மாதிரி விருது வழங்குவதும், பெறுவதும் சந்தோசம் தான். விருது வாங்கியவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் முன்னால் இருக்கும் V வெற்றியைக் குறிக்கும், வசந்த பாலனைக்குறிக்கும், வேல்ஸ் குழுமத்தைக் குறிக்கும். திரைப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மெய் குழுவின் உழைப்பிற்கும், இதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் வேல்ஸ் பல்கலைகழகத்திற்கும் என் வாழ்த்துக்கள். விருது வாங்கிய அனைத்து படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது…
மெய் குழுவினர் தமிழ் திரைப்படைப்பாளிகளுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சி. கூழாங்கல், ப்ளூஸ்டார், கலைஞர்கள் எனக் கடந்த ஆண்டு நான் நேசித்த அனைவருக்கும் தேடித் தேடி விருது அளித்திருப்பது மிக மகிழ்ச்சி. இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் அது தான் படைப்பாளிகள் தொடர்ந்து ஓட ஊக்கமாக இருக்கிறது. வெயில் படத்திற்குக் கிடைத்த விருதுகள் தான் என்னை ஓட வைத்தது. இந்த விருது விழாவை ஒருங்கிணைத்த மெய் குழுவினருக்கும் மற்றும் வேல்ஸ் பல்கலைகழகத்திற்கும் என் நன்றி.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE