30.5 C
New York
Sunday, May 22, 2022

Buy now

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறார். அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் ஒரு வட மாநிலக் கும்பல கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதனை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி வந்து அந்த ஆழ்துளை கிணற்றில் போட்டுவிடுகிறது கொள்ளைக் கும்பல்.

இன்னொரு பக்கம் போலீஸ்காரர் மகனான, புத்தம் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் இன்ஜினியரிங் பட்டதாரியான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதைக்கொண்டு அவர் அந்தக் குழந்தையை மீட்க முயலும் போது அதை கொள்ளை கும்பல் தடுக்கப் பார்ப்பதும், அதையும் மீறி நடந்தது என்ன என்பதை பரபரப்பாக மட்டுமின்றி ரசிக்கும்படி சொல்வதுதான் ஐங்கரன்.

நாயகன் ஜிவி பிரகாஷ் – ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கமிட் ஆன படம்.. மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய கருவிகளை கண்டுபிடித்து, அதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக உரிய அலுவலகத்துக்கு சென்று தனது கண்டுபிடிப்புகளை விளக்கும் ரோலையும். பல அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர்களின் முயற்சி வீணாக்கப் படுவதை தத்ரூபமாக வெளிக்காட்ட முயன்று இருக்கிறார்.ஜி.வி.யின் இசையில் பாடல்களை காட்டியிலும் பின்னணி இசை ஓங்கி ஒலிக்கிறது. அதிலும் இரண்டாம் பாதியில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் காட்சிகளில் ஹார்ட் பீட்டை அதிகரிக்கிறது பின்னணி இசை. படத்தின் மற்றொரு பலம் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. அபாரமான உழைப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்கால் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போயிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராஜா முகம்மது. ஈட்டி படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இப்படத்தின் மூலம் கமர்ஷியல் கலந்த கருத்துப் படத்தைக் கொடுத்துள்ளார். எடுத்துக் கொண்ட கதையை வலுவாகவும், நம்பகத்தன்மையுடனும் வழங்கி டைரக்டர் படமென்பதை நிரூபித்து விட்டார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,321FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE