15.6 C
New York
Monday, September 16, 2024

Buy now

spot_img

“ரம்” படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் நரேன் உறுதி

நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிக்க சிரமம் எடுத்து கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர். அப்படி வந்தது தான் சித்திரம் பேசுதடி,அஞ்சாதே மற்றும் முகமூடி. இதற்கு இடையில் சிறிய சறுக்கல்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல படங்களில் பணியாற்றி தனது பணியை திறம்பட செய்பதில் நரேன் வல்லவர். சமீபத்தில் வெளியான கத்துக்குட்டி படமும் அந்த வகையே..,

இதனை தொடர்ந்து நடிகர் நரேன் தற்போது நடித்து வரும் படம் ரம். இந்தப் படத்தை பற்றி அவர் கூறியது.., ‘இதுவே நான் நடிக்கும் முதல் HORROR படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர் விவேக் நடிக்கிறார் அவர் உடன் நான் நடிப்பதில் மிக்க மகழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன்.

இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும் அதற்கு உறுதி நிச்சயம் புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும், அனிருத் இசை அமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து வந்து விடும்,அந்த வகையில் அவருடைய இசை அமைப்பில் நான் நடித்து இருப்பதில் எனக்கு பெருமையே' என்றார்.

மசாலா படம் படத்தை தயாரித்த ஆல் வின் pictures தயாரிக்க , சாய் பாரத் இயக்க புது முகம் ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மிய ஜார்ஜ் நடிக்க அவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்க படும் 'ரம்' ரசிகர்களை கிறு கிறுக்க வைக்கும் காட்சி அமைப்புகளை கொண்டப் படமாகும்..

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE