-0.5 C
New York
Friday, December 6, 2024

Buy now

spot_img

27 பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெற்ற முப்பரிமாணம் படத்தின் பாடல் கட்சிகள்

சமயாலயா கிரியேஷன் சார்பாக பொள்ளாச்சி. வி.விசு மற்றும் பொள்ளாச்சி. கோல்டு.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் “முப்பரிமாணம்” என்ற திரைப்படத்திற்காக 27 பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெற்ற பாடல் காட்சி மிக பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டது.

புதிய வருட பிறப்பிற்காக அனைவரும் கலந்து கொண்டாடும் விதமாக முப்பரிமாணம் படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

1. ஜாக்கி ஷரோப்
2. கே.பாக்யராஜ்
3. பிரபு
4. பாண்டியராஜன்
5. பார்த்திபன்
6. ராதிகா சரத்குமார்
7. ரம்யா கிருஷ்ணன்
8. பூர்ணிமா பாக்யராஜ்
9. விவேக்
10. ஆர்யா
11. வெங்கட் பிரபு
12. விஜய் ஆண்டனி
13. பிரசன்னா
14. பாபி சிம்ஹா
15. கலையரசன்
16. சூரி
17. வித்தார்த்
18. ஆரி
19. பிரேம்ஜி அமரன்
20. அசோக் செல்வன்
21. சங்கீதா கிரிஷ்
22. ஜஸ்வர்யா ராஜேஷ்
23. ஜனனி ஐயர்
24. பிரித்வி
25. கிரிஷ்
26. மொட்டை ராஜேந்திரன்
27. கீர்த்தி சாந்தனு

ஆகியோர் இப்பாடலில் பங்கேற்றுள்ளனர். கபிலன் வரிகளில் உருவான இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிருந்தா நடனம் அமைத்துள்ளார்

இயக்குனர் கதிரிடம் காதல் வைரஸ் படத்திலும், இயக்குனர் பாலாவிடம் நான் கடவுள் படத்திலும் பணியாற்றிய அதிரூபன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர் இயக்கிய “ஜனனம்” என்ற குறும்படம் மாநில விருது பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

சாந்தனு கதாநாயகனாகவும் சுருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு இராசாமதி. படத்தொகுப்பை தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கையாள்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:

கலை இயக்கம் – மாய பாண்டி,
பாடல்கள் – நா.முத்துகுமார், கபிலன், யுகபாரதி
நடனம் – பிருந்தா, பாபி ஆண்டனி, ஷெரிஃப்
சண்டை பயிற்சி – ஸ்டன்ட் கோட்டி
மக்கள் தொடர்பு – நிகில்

மிகுந்த பிரம்மாண்ட பொருட்செலவில் அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான முறையில் முப்பரிமாணம் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவில் உள்ள ஆலப்புழ, அதிரப்பள்ளி போன்ற இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதி கட்ட பணிகள் தீவரமாக நடைபெற்றுவரும் நிலையில் முப்பரிமாணம் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE