23.5 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

2 வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார் நடிகர்​ சூர்யா

​​​​சூர்யா​ ​தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு நேற்று சந்தித்து கலந்துரையாடினார் ​. இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் , கேரளம் , ஆந்திரா , கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,​000​ ​க்கும் மேல் ​ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சூர்யா , என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் என்னுடைய் அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் மிக சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையையும் , சந்தோஷத்தையும் அளிக்கிறது. ஆனால் எல்லோரும் முதலில் உங்கள் தாய் , தந்தை , குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்க்கு பிறகு நீங்கள் நற்பணி மன்ற பணிகளில் ஈடுபட்டால் போதும். இதுவரை 20,
​000​ பேர் சூர்யா அரசு இரத்ததான வங்கிக்கு இரத்தம் வழங்கி உள்ளீர்கள் , இது மிகப்பெரிய சாதனை ஆகும். இதனை பாராட்டி சென்னை அரசு மருத்துவ மனையில்இருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை பார்த்தேன். நிஜமாகவே இது பெருமைக்கூரிய ஒன்றாகும். இந்த முறையும் நீங்கள் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம், அன்ன தானம் மரக்கன்று நடுதல் , கோவிலில் சிறப்பு பூஜை ஆகிய நற்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள் , எல்லோருக்கும் நன்றி..

இதே போல் நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். ஒரு குழந்தையின் கல்வியால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு நாடே பயனடையும். ஆகவே நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபடுங்கள் மரக்கன்று நடுவது காலம் கடந்து நிற்கக்கூடிய ஒன்றாகும். ஆம் , இன்று நீங்கள் கன்றாக நடும் மரம் காலம் கடந்து மரமாக வளர்ந்து நின்று மழையை கொடுக்கும். அதே போல் நீங்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் , மிக கவனமாக அடுத்தவருக்கு இடையூறு தராமல் நீங்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கூறினார்.

விழாவிற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சூர்யா வந்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் புகைப்படம் எடுத்து கொண்டார். விழாவில் ராஜசேகர பாண்டியன் , ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE