21.3 C
New York
Saturday, September 21, 2024

Buy now

spot_img

சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “

தமிழ், தெலுங்கில் உருவாகிறது

சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “

இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக, கடந்த 17 வருடங்களாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த “ ராகினி எம். எம்.எஸ் 2 “ என்ற ஹிந்தி படத்தை தமிழ், தெலுங்கிலும் “ ராத்ரி “ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம், தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.

பிரபலமான இந்தி நடிகர் ஜிதேந்திராவின் இந்த தயாரிப்பு நிறுவனம், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கிறது.

ராத்ரி படத்தில் கதாநாயகியாக கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்திருக்கிறார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி, தூக்கத்தை கெடுதுக் கொண்டிருக்கும் சன்னி லியோன் இந்த படத்தில் கவர்ச்சி விருந்து படைத் திருப்பதுடன், பயங்கரமான பேயாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.” சாமுராய் “ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ் , சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய “ பேபி டால் “ என்ற சுப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

ராத்ரி படத்தின் வசனங்களையும், பாடல்களையும் சிவந்தி, ரணதந்த்ரா, அதர்வணம் போன்ற படங்களின் இயக்குனரான ஆதிராஜன் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய “ ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு “

“ தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு “ என்று தொடங்கும் ஸ்டைலிஷான ( பேபி டால் ) பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார். பை பை பை கலாச்சி பை பாடலுக்கு பிறகு ரம்யா நன்பீசனுக்கு இந்த பாடல் சூப்பர் ஹிட் பாடகி என்ற அந்தஸ்தை பெற்றுத் தருவது உறுதி. மற்றொரு பாடலை பாலாஜிஸ்ரீ பாடியுள்ளார். வசனம் உதவி நந்து.

ஒரு பேய் பங்களாவிற்கு படப் பிடிப்பிற்கு செல்லும் படக்குழுவினர் அங்கிருக்கும் பேயால் எப்படி பாதிக்கப் படுகின்றனர் என்பதுதான் கதை. திகில் காட்சிகள் பல கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கின்றன.

கவர்ச்சி காட்சிகளிலும், திகில் காட்சிகளிலும் ரசிகர்களை மிரட்டப் போகும் சன்னி லியோனின் “ ராத்ரி “ விரைவில் திரைக்கு வருகிறது.

ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE