12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

யட்சன் Movie news

தரமான படங்களை ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வரும் யு டி வி motion pictures , தங்களது அடுத்த வெற்றி படைப்பை அறிவித்து உள்ளனர் .இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தன்னுடைய விஷ்ணுவர்த்தன் films factory என்னும் புதிய பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக யு டி வி நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை வழங்கிகிறார் .”யட்சன் ‘ என்று பெயரிட பட்டு இருக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் , கிருஷ்ணா இணைந்து நடிக்க உள்ளார் .’ யட்சன்’ என்றால் இயக்குபவர் என்று அர்த்தம்.

‘ யட்சன்’ காதல்,மோதல்,நகைசுவை என ஒரு ஜனரஞ்சக கலவையான படம் .மிகவும் சுவாரசியமான கதை களம் உள்ள படம் .ஆர்யாவுக்கும்,கிருஷ்ணாவுக்கும் இதுவரை ஏற்றிராத பாத்திர படைப்புகள் உள்ள படம் .தமிழ் திரை உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன்,அவருடைய நேர்த்தியான கதை அமைப்பினாலும் , திட்டமிட்டு செயல் படும் இயக்கத்தாலும் ‘யட்சன் ‘ படத்தை மாபெரும் வெற்றி படமாக்க உருவாக்குவார் என்பதில் நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது ‘ என்று கூறுகிறார் யு டி வி நிறுவனத்தின் தெற்கு,தலைமை நிர்வாகி திரு தனஞ்செயன் .

‘ நான் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் படத்திலேயே யு டி வி போன்ற ஒரு உலக பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டி இருப்பது மிக பெருமை .மிகவும் உற்சாகமூட்டும் ஒரு கதையின் பின்னணியில் ஆர்யா , கிருஷ்ணா, ஆகியோருடன் கிஷோர் , ஜான் விஜய் , தம்பி ராமையா , எம் .எஸ். பாஸ்கர் , ‘ரோபோ ஷங்கர்’ என்று திறமைகளின் சங்கமம் நடை பெறுகிறது . என் சக தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் வெற்றியை உறுதி படுத்துவர் ‘ என கூறினார் இயக்குனர் விஷ்ணுவர்தன் .

விஷ்ணுவர்த்தனுடன் வெற்றி பட கதாசிரியர்கள் என்ற அழைக்க படும் ‘சுபா ‘ கதை அமைக்க , ஓம் பிரகாஷ் ஒளிபதிவு செய்ய , ஸ்ரீகர் பிரசாத் பட தொகுப்பில் , தேசிய விருது பெற்ற லாலகுடி இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார் . இந்த குழுவே ‘ ஆரம்பம் ‘ படத்தின் மாபெரும் வெற்றிக்கு துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள ‘யட்சன்’ அடுத்த பொங்கல் வெளியீடாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE