20.2 C
New York
Thursday, May 15, 2025

Buy now

spot_img

நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது ‘பிச்சகாடு’ (பிச்சைக்காரன்) திரைப்படம்

மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை தன்னுடைய தாரக மந்திரமாக எடுத்து கொண்டு, திரையுலகின் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, தன்னுடைய தனித்துவமான குரலாலும், துள்ளலான இசையாலும் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெற்ற விஜய் ஆண்டனி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதை களத்தையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'நான்' மற்றும் 'சலீம்' திரைப்படங்கள் மூலம் மிகவும் யதார்த்தமான நடிகர் என்ற பெயரை பெற்ற விஜய் ஆண்டனி, இந்தியா - பாகிஸ்தான் படம் மூலம் அனைத்து குடும்பங்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டார்.

சமீபத்தில் இயக்குனர் சசி இயக்கி, விஜய் ஆண்டனி நடித்து வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரின் யதார்த்த நடிப்பிற்கு ஒரு சிறந்த அடையாளமாக விளங்குகின்றது.
சினிமாவிற்கு மொழி ஒரு தடையல்ல, அதையும் தாண்டி உணர்ச்சிகளால் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது தெலுங்கில் வெளியான 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்). வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நூறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் இந்த 'பிச்சகாடு' திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம்.

பெரும்பாலும் செண்டிமெண்ட் சார்ந்த தலைப்புகள் தான் தென் இந்திய சினிமாவில் வைக்கப்பட்டு வருகிறது. அந்த முறையை தன்னுடைய எதிர்மறையான தலைப்புகளால் உடைத்தெறிந்தவர் விஜய் ஆண்டனி. என்னதான் படத்தின் தலைப்பு எதிர்மறையாக இருந்தாலும், அந்த கதை களத்திற்கும், அந்த கதாப்பாத்திரத்திற்கும் பெருமளவில் தொடர்பு இருக்கும்.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக கருதப்படுவது, விரைவில் வெளியாக இருக்கும் சைத்தான் திரைப்படம். வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படமாகவும் இந்த சைத்தான் இருக்கும் என தெளிவாக சொல்லலாம். சைத்தானை தொடர்ந்து, 'நான்' பட இயக்குனர் ஜீவா ஷங்கரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கொண்டிருக்கும் 'எமன்' திரைப்படம், 2017 ஆம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் என்று சொன்னால் அது மிகையாகாது

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE